ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களில் பணி


ஆதார் நிரந்தர சேர்க்கை மையங்களில் தரவு உள்ளீட்டாளர் பணிக்கு (Data Entry Operator), இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால் (UIDAI) நியமிக்கப்பட்ட NSEIT LTD நிறுவனத்தின் தேர்வில் தேர்ச்சி அவசியம்.
இதில் கலந்து கொள்ள விரும்பும் 12-ஆம் வகுப்புத் தேர்ச்சி பெற்றோர், https://uidai.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். இதற்கான பதிவுக் கட்டணம் ரூ.365 செலுத்தி ஆன்லைன் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் .

தொடர்ச்சியாக நடைபெற்று வரும் இந்தத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள், தங்களது விவரங்களை admin@fcosservices.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்.இதன்மூலம் அவர்கள் எல்காட் மற்றும் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் நடத்தும் ஆதார் சேர்க்கை மையங்களில் அவுட்சோர்சிங் முகமை மூலம் பணியமர்த்த வாய்ப்புள்ளது.