Tamil Kalvi News
(10-06-2019)
*இன்றைய திருக்குறள்*
கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.
பெருமையின் பீடுடையது இல்.
*பொருள்*:
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.
உரிய கடமையைச் செய்வதில் சோர்வு காணாமல் எவனொருவன் முயற்சிகளை விடாமல் மேற்கொள்கிறானோ அந்தப் பெருமைக்கு மேலாக வேறொரு பெருமை கிடையாது.
*இன்றைய சிந்தனை*
நீண்ட நாள் வாழ வேண்டுமானால் இளமையாக வாழுங்கள்;. இளமையாக வாழ வேண்டுமென்றால் கவலையைத் துறங்கள்.
If you want live for long era, just be as young, and to be as a young, please leave your all grief.
*Important Daily Words*
*Profession & Accupation*
✳Tinsmith, Tinker -
தகர வேலை செய்பவர்
✳Trader - வர்த்தகர்
✳ Trainer -
பயிற்சியாளர்
✳Treasurer - கருவூலப் பொருளாளர்
✳Typist - தட்டெழுத்தர்
*Profession & Accupation*
✳Tinsmith, Tinker -
தகர வேலை செய்பவர்
✳Trader - வர்த்தகர்
✳ Trainer -
பயிற்சியாளர்
✳Treasurer - கருவூலப் பொருளாளர்
✳Typist - தட்டெழுத்தர்
Tamil Kalvi News
*நூலாசிரியர்கள்-நூல்கள்*
*பாரதிதாசன்*
குடும்ப விளக்கு, பாண்டியன் பரிசு, இருண்ட வீடு, அழகின் சிரிப்பு, குறிஞ்சித் திரட்டு, இளைஞர் இலக்கியம், எதிர்பாராத முத்தம், நல்ல தீர்ப்பு, பிசிராந்தையார் .
*இன்றைய மூலிகை*
*கற்பூரவல்லி*
வியர்வை பெருக்கும், கோழை அகற்றும், காய்ச்சல் நீக்கும்.
*பொது அறிவு*
1. முதன் முதலிம் கணிப்பொறிக்கு புரோகிராம் (program) எழுதியவர் யார்?
1. முதன் முதலிம் கணிப்பொறிக்கு புரோகிராம் (program) எழுதியவர் யார்?
*லேடி லவ்லேஸ்*
2. இரயில்வே தென் மத்திய மண்டலத்தின் தலைமையிடம் எது?
*செகந்திராபாத்*
*About Verb Forms*
வினைச்சொல் வடிவங்கள்
ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:
ஐந்து வடிவங்களாகப் பயன்படுகின்றன. அவைகளாவன:
1. Base Form
2. Progressive Form
3. Third Person Form
4. Past Form
5. Past Participle Form
2. Progressive Form
3. Third Person Form
4. Past Form
5. Past Participle Form
எடுத்துக்காட்டு:
"do" எனும் ஒரு வினைச்சொல்லை எடுத்துக்கொண்டோமானால், அது do, doing, does, did, done என ஐந்து வினை வடிவங்களாகப் பயன்படுவதைப் பார்க்கலாம். இவ்வாறு ஆங்கில வினைச் சொற்கள் அனைத்தும் ஐந்து வினை வடிவங்களாக பயன்படுகின்றன.
Tamil Kalvi News :
*இன்றைய கதை*
கொக்குக்கு எத்தனை கால்கள்?
ஒரு வீட்டில் வீட்டு உரிமையாளரும், அவருக்குத் துணையாக ஒரு சமையல்காரரும் இருந்தனர். ஒரு நாள் வீட்டுக்காரர் கொக்கு ஒன்றை வாங்கிவந்து சமையல்காரரிடம் கொடுத்து கொக்கு குழம்பு வைக்கும்மாறு சொன்னார். சமையல்காரர் குழம்பு வைத்ததும், குழம்பையும் சிறு அளவு கறியையும் சுவைப் பார்க்கலாம் என்று கால் துண்டு ஒன்றை முழுவதும் சாப்பிட்டு விட்டார். பின்பு சோறு பரிமாறப்பட்டதும், வீட்டுக்காரர் சாப்பிட ஆரம்பித்தார். சமையல்காரர் முதலாளிக்குப் பிடித்த கொக்கின் கால் ஒரு துண்டை முதலில் எடுத்து வைத்தார். இன்னொரு கால் துண்டையும் வை என்றார் முதலாளி.

கொக்கிற்கு ஒரு கால்தானுங்க முதலாளி என்றார் சமையல்காரர். கொக்கிற்கு இரு கால்கள் இருக்குமே? என்றார் முதலாளி. இல்லீங்க ஒரு கால்தானுங்க என்றார் சமையல்காரர். முதலாளி எவ்வளவோ சொல்லிப் பார்த்தும் சமையல்காரர் ஒப்புக்கொள்ளவில்லை. முதலாளி சாப்பிட்டு முடித்ததும் சமையல்காரரை வயல்வெளிக்கு கொக்கு காட்ட அழைத்துச் சென்றார். வயலில் ஒரு கொக்கு ஒரு காலை மடக்கிக்கொண்டு ஒற்றைக் காலுடன் நின்று கொண்டிருப்பதை பார்த்த சமையல்காரர் பாருங்க முதலாளி, கொக்குக்கு ஒற்றைக் கால்தான் என்று முதலாளியிடம் காட்டினார்.
உடனே முதலாளி தன்னுடைய இரு கைகளையும் தட்டினார். சப்தம் கேட்டதும் கொக்கு தனது இரு கால்களையும் மடக்கி கொண்டு பறக்க ஆரம்பித்தது. பார், கொக்கிற்கு இரு கால்கள் என்று சமையல்காரரிடம் காட்டினார் முதலாளி. நீங்க இப்ப கை தட்டியதற்கு பதிலாக, சாப்பிட ஆரம்பிக்கும்போதே கை தட்டியிருந்தால் கொக்கிற்கு இரு கால்கள் வந்திருக்குமே என்றாராம் சமையல்காரர்.
Tamil Kalvi News :
*茶செய்திச் சுருக்கம்*茶
✳சாலையில் கிடந்த 50 ஆயிரம் பணத்தை நேர்மையாக ஒப்படைத்த சிறுவன் யாசின் பற்றிய குறிப்பு இரண்டாம் வகுப்பு தமிழ் பாடப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
✳தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம். பேரவையைக் கூட்ட ஸ்டாலின் கோரிக்கை.
✳புதிய தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ள சீனா தயார்- ஜின்பிங் அறிவிப்பு.
✳மெரினாவில் போராட்டம் நடத்த அனுமதி கிடையாது.நீதிமன்றம் அறிவுறுத்தல்.
✳உலகப்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய வீரர் தவான் சதமடித்து 3 அல்லது அதற்கு அதிகமான சதங்கள் அடித்த பட்டியலில் இணைந்துள்ளார்.
*தொகுப்பு*:
☘☘
T.THENNARASU,
TN DIGITAL TEAM,
R.K.PET BLOCK,
THIRUVALLUR DT,
9600423857.
☘☘
T.THENNARASU,
TN DIGITAL TEAM,
R.K.PET BLOCK,
THIRUVALLUR DT,
9600423857.
Post a Comment