ஆன்லைன் வங்கி சேவையான RTGS மற்றும் NEFT பரிவர்த்தனை கட்டணங்களை நீக்க முடிவு - ஆர்.பி.ஐ

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

ஆன்லைன் வங்கி சேவையான RTGS மற்றும் NEFT கட்டணங்களை நீக்க ஆர்பிஐ முடிவு செய்துள்ளது. மத்திய ரிசர்வ் வங்கி தலைமையிலான நாணய கொள்கை கூட்டம் கடந்த மூன்று நாட்களாக நடைபெற்று வந்தது. 


அதில் இணையதள வங்கி சேவையில் பணம் பரிமாற்றம் செய்ய விதிக்கப்பட்டு வரும் RTGS மற்றும் NEFT கட்டணங்களை மத்திய அரசு நீக்க முடிவு செய்துள்ளது. RTGS மற்றும் NEFT பரிவர்த்தனைகள் மீதான கட்டணத்தை ஆர்பிஐ நீக்க முடிவு செய்துள்ளதால், விரைவில் வங்கிகள் இந்த நண்மையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கும் போது நல்ல பயண் கிடைக்கும். 

இதனால் இணையதள வங்கி சேவை பயன்படுத்துவது ஊக்குவிக்கப்படுவது மட்டுமல்லாமல் வங்கி வாடிக்கையாளர்களுக்கான செலவும் குறையும். மேலும் ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதமும் 5 சதவீதத்திலிருந்து 5.75 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 
எனவே விரைவில் வீட்டுக் கடன், வாகன கடன் மீதான தவணை குறைய வாய்ப்புள்ளது. ஏற்கனவே, எச்டிஎப்சி உள்ளிட்ட சில வங்கிகளில் மட்டும் NEFT பரிவர்த்தனை கட்டணங்கள் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments