அரசுப்பள்ளி ஆசிரியரின் M3 (மகிழ்வித்து மகிழ் இயக்கம்) தன்னார்வ தொண்டு அமைப்புக்கு நாளைய கலாம் விருது!

Add This Number In Your Whatsapp Groups - 9786053272
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

kalvi news in tamil,kalvi news in tamil, Tamil Kalvi News

அண்மையில் ஜூன் 9, 2019 அன்று பாரத ரத்னா Dr.அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை திருவண்ணாமலை கிளை சார்பில் விளாங்குப்பத்தில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் நிறுவனரும் மாநில தலைவருமான பணிநிறைவு இந்திய இராணுவ வீரருமான திருமிகு நடராஜன் அவர்கள் கரங்களால் கலாமுக்குப் பிடித்தமான ஏழை எளிய பொதுமக்கள் மற்றும் கலாம் நெஞ்சில் என்றும் குடியிருந்த மாணவர்கள் முன்னிலையில்  திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகேயுள்ள மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் முனைவர் மணி கணேசனின்  M3 தன்னார்வ தொண்டு அமைப்பிற்கு தொடர்ந்து பள்ளி வளர்ச்சி, மாணவர் நலன், சமுதாய மேம்பாடு ஆகியவற்றிற்கு உழைத்து வரும் சமூகப் பணிகளுக்காக, சிறந்த சமூக சேவைக்கான  நாளைய கலாம் விருது வழங்கிச் சிறப்பிக்கப்பட்டது. இந்த விருதினை அரசுப்பள்ளியில் படித்து வாகை சூடி வரும் ஏழை எளிய மாணவர்களுக்குச் சமர்பிப்பதாக ஆசிரியர் மணி.கணேசன் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

Post a Comment

0 Comments