Title of the document
kalvi news in tamil மருத்துவப்படிப்பில் 85 சதவீதம் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மீதமுள்ள15 சதவீதம் மட்டுமே வெளிமாநில மாணவர்களுக்கு வழங்கப்படும் என்றும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.kalvi news in tamil
சென்னைகோட்டூர்புரத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தமிழ்நாட்டை பொருத்தவரை நீட் தேர்வில் ஆண்டுக்கு ஆண்டு தேர்ச்சி விகிதம் அதிகரித்து வருவதாகவும், நாட்டிலேயே, தமிழ்நாட்டில் மட்டும்தான் கிராமப்புற மாணவர்கள் பயன்பெறும் வகையில் இலவச நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.



சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தை உத்தரப்பிரதேச துணை முதலமைச்சர் தினேஷ்சர்மா பார்வையிட்டார். அப்போது,தமிழ்நாட்டின் புதிய மாநில பாடத்திட்டங்களை பார்வையிட்ட தினேஷ் சர்மா,மத்திய அரசு எந்த தேர்வை கொண்டு வந்தாலும், அதை தமிழ்நாட்டு பாடத்திட்டங்கள் சமாளிக்கும் என பாராட்டியதாக தெரிவித்தார்.kalvi news in tamil
பயிற்சியும், முயற்சியும் இருந்தால் மாணவர்கள் எந்த தேர்விலும் வெற்றிபெற முடியும் என தெரிவித்த அமைச்சர் செங்கோட்டையன், மருத்துவப்படிப்பில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்ற 85 சதவீதம் தமிழக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்றும் மீதமுள்ள 15 சதவீதம் மட்டுமே வெளிமாநில மாணவர்களுக்கு வழங்கப்படும் என கூறினார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post