Title of the document


 மாண்புமிகு தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்களின் அழைப்பின் பேரில் இன்று (26.06.19) ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சர் அவர்களை நேரில் சந்தித்தனர்.

 இச்சந்திப்பின் போது, ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் பங்கேற்ற ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப் பெற வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது தொடர்பாக மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்று நல்ல முடிவை அறிவிப்பதாக அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.

 தற்போது வெளியிடப்பட்டுள்ள மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகளில் பணியிட மாறுதலுக்கு விண்ணப்பிக்க நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச பணிக்காலத்தை 3 ஆண்டுகளில் இருந்து ஓர் ஆண்டாகக் குறைக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 மேலும், அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களைப் பணியமர்த்துவதில் பல்வேறு மாறுபட்ட நடைமுறைகளைப் பின்பற்றியுள்ளது பற்றியும், 20 - 30 ஆண்டுகள் பணியாற்றியுள்ள மூத்த ஆசிரியர்களும் இதில் பாதிப்படைந்துள்ளது பற்றியும் எடுத்துக் கூறி இதனைச் சரி செய்திட வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

 இக்கோரிக்கைகள் குறித்து இயக்குநரை நேரில் அழைத்துப் பேசி உரிய நடவடிக்கைகளை எடுப்பதாக மாண்புமிகு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அவர்கள் உறுதியளித்தார்.

சென்னை.
26.06.2019

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post