எல்.கே.ஜி., ஆசிரியர் இடமாறுதல் துவக்கம்

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

சென்னை:அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., ஆசிரியர் நியமன நடவடிக்கை துவங்கியுள்ளது. தமிழகத்தில், தனியார் பள்ளிகளில், மாணவர் சேர்க்கையை கட்டுப்படுத்தும் வகையில், அரசு பள்ளிகளிலேயே, எல்.கே.ஜி., வகுப்புகளை துவங்க, பள்ளி கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இதன்படி, 2,381 தொடக்கப் பள்ளிகளுக்கு அருகில் உள்ள, அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.இதற்கு, தொடக்கப் பள்ளிகளில் உள்ள, கூடுதல் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்படுகின்றனர். இவர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளின் அருகேயுள்ள, அங்கன்வாடிகளுக்கு சென்று, எல்.கே.ஜி., வகுப்புகளில், இரண்டு மணி நேரம் பணியாற்ற வேண்டும்.

இதற்கு, ஆசிரியர்கள் மறுப்பு தெரிவித்து, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், அரசின் முடிவுக்கு, நீதிமன்றம் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து, அங்கன்வாடிகளில், எல்.கே.ஜி., வகுப்புகளுக்கான ஆசிரியர் நியமனம் துவங்கி உள்ளது.இதற்காக, மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியாக, இடமாறுதல் உத்தரவு வழங்கப்படுகிறது. இதற்கு, ஆசிரியர் சங்கங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. வேண்டுமென்றே, தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு இடமாறுதல் வழங்கப்படுவதாக, ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலர் மயில், குற்றம் சாட்டியுள்ளார்.


Post a Comment

0 Comments