Title of the document



சென்னை: பொறியியல் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை இன்று (ஜூன் 20) தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் வெளியிட்டார். இதில் திருப்பூர் மாணவர் முதலிடம் பெற்றுள்ளார்.


நடப்பாண்டில் பி.இ. மற்றும் பிடெக் ஆன்லைன் கலந்தாய்வுக்கு விண்ணப்பித்த ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரில், ஒரு லட்சத்து 2 ஆயிரம் மாணவர்கள் அசல் சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றனர்.

 இவர்களுக்கான தரவரிசைப் பட்டியலை உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் இன்று வெளியிட்டார்.

புகார்கள் எதேனும் இருந்தால் 044-22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு 4 நாட்களுக்குள் மாணவர்கள் தெரிவிக்கலாம்.


வருகிற 25ம் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 26ம் தேதி முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுகளுக்கும், 27ம் தேதி விளையாட்டுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது.


தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு 26ந் தேதி முதல் 28ந் தேதி வரை நடைபெற உள்ளது. பொதுப் பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதில் திருப்பூர் மாணவர் நந்தகுமார் தரவரிசை பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார். மேலும் 7 மாணவர்களும், 3 மாணவிகளும் 200க்கு 200 மதிப்பெண் பெற்றுள்ளனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post