அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரித்த கேஜி வகுப்புகள்!

Join Our KalviNews Telegram Group - Click Here
9080019831 - Add This Number In Your Whatsapp Groups - 9080019831



அங்கன்வாடிகள் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்போது எல்கேஜி, யூகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இதில் மாணவர்கள் சேர்க்கை எப்படி உள்ளது, பெற்றோர்கள் வரவேற்பு தருகின்றனரா என்பது தொடர்பான தகவல்களைத் தெரிந்துகொள்ள சில அரசுப் பள்ளி ஆசிரியர்களைத் தொடர்பு கொண்டோம்.



சந்தோஷ்- இடைநிலை ஆசிரியர் கடவம்பாக்கம்:

தமிழகத்தைப் பொறுத்தவரை தற்போது 2381 பள்ளிகளில் கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன

எந்த அரசாங்கப் பள்ளிகளுக்குள் அங்கன்வாடி மையங்கள் உள்ளதோ அந்தப் பள்ளிகளில் மட்டும் கே.ஜி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. மற்ற குழந்தைகள் ஏற்கெனவே பயின்ற அங்கன்வாடி மையங்களில் அடிப்படைக் கல்வியைக் கற்றுவருகின்றனர். வேறுவேறு பள்ளிகளில் உபரி ஆசிரியராக இருந்தவர்களை கேஜி வகுப்புகளுக்குத் தற்போது ஆசிரியர்களாக நியமித்து உள்ளனர். ஒவ்வொரு பள்ளிக்கும் கேஜி வகுப்புக்கு என ஒரு கற்றல் கருவி பெட்டி கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலமாகப் பாடம் எடுத்துட்டு இருக்கோம். உண்மையில் பெற்றோர்களிடம் இதற்கு நல்ல வரவேற்பு இருக்கு. வழக்கத்தை விட இந்தஆண்டு அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து உள்ளது. எல்லா அங்கன்வாடி மையங்களிலும் கேஜி வகுப்புகள் தொடங்கி முறையான பயிற்சிகள் வழங்கினால் பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளைத் தேடி வர ஆரம்பிப்பார்கள்.



சியாமளா- ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மேல்பாக்கம் :

தற்போது பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை ரெண்டரை வயதிலேயே பள்ளியில் சேர்த்து விடுகின்றனர். ப்ரிகேஜி ஆங்கில வழியில் பயிலும் குழந்தைகளை அப்படியே தொடர்ச்சியாக அதே பள்ளியில் சேர்த்துப் படிக்க வைப்பதால்தான் அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை குறைந்து கொண்டே வந்தது. தற்போது அரசுப் பள்ளிகளிலேயே கேஜி வகுப்புகள் தொடங்குகிறோம் என்றதும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளில் சேர்க்க ஆர்வம் காட்டி வருகின்றனர். கேஜிக்கான அட்மிஷன் எங்கள் பள்ளியில் இதுவரை 14 பேருக்கு நடந்துள்ளது. தொடர்ந்து அட்மிஷன் நடைபெற்று வருகிறது.கேஜி வகுப்புகள் பயிற்சி எடுக்க ஆசிரியர்களுக்குத் தனி பயிற்சிகளும் வழங்கப்பட்டு வருகிறது. இனி பெற்றோர்கள் தனியார் பள்ளியை நோக்கி ஓட மாட்டார்கள் என்று நம்புகிறோம்"என்கிறார்.

சுதா- பெற்றோர் - விழுப்புரம்:

எனக்கு ரெண்டு பசங்க மூத்த பையனை இங்கிலீஷ் மீடியத்தில்தான் சேர்த்து இருக்கோம். இப்போ ரெண்டாவது பையனையும் தனியார் பள்ளியில் சேர்க்கணும்னா பணத்துக்கு என்ன பண்றதுனு யோசிட்டு இருந்தப்போதான் அரசாங்கம் கேஜி வகுப்புகளை அங்கன்வாடியிலேயே தொடங்குற செய்தியைப் பார்த்தோம். எந்தத் தயக்கமும் இல்லாமல் இப்போ அரசாங்கப் பள்ளியிலேயே அட்மிஷன் போட்டாச்சு"என்கிறார் மகிழ்ச்சியாக.