முதல் பருவம் - முதல் வகுப்பு பாடப் புத்தகம் முழுவதும் வீடியோ வடிவில் !முதல் வகுப்பின் அனைத்துப் பாடங்களிலுமுள்ள ஒவ்வொரு பாட வரிகளும் வீடியோவாக தொகுக்கப்பட்டுள்ளது.
இதில் Menu கொடுக்கப்பட்டுள்ளதால் ஆசிரியர் தான் நடத்தப்போகும் பாடத்தை தேர்வு செய்து நடத்தலாம். வார்த்தைகளால் விளக்கமுடியாத அனைத்தும் வீடியோவாக உள்ளதால் எளிதாக பாடக்கருத்துக்களை விளக்கலாம். ஒருமுறை பாடம் நடத்தியபின் பலமுறை வீடியோவை காண்பிக்கும்போது பாடக்கருத்துகள் மாணவர்கள் மனதில் பதிகிறது. தொலைக்காட்சியின் மூலம் பாடம் நடத்துவதால் மாணவர்களின் கவனம் சிதறாமலும் , மகிழ்வுடனும் கற்பார்கள்.

தமிழ், ஆங்கிலம், சூழ்நிலையியல் போன்றவற்றிற்கான வீடியோக்கள்  தனித்தனி குறுந்தகடுகளில் பதியப்பட்டுள்ளன. தமிழ் வழி & ஆங்கில வழி இரண்டும் உள்ளன. குறுந்தகடுகள் பெறுபவர்கள் கணினியில் பதிவுசெய்துகொள்ளலாம். விரும்பினால் பிற ஆசிரியர்களுக்கும் பதிவுசெய்து கொடுக்கலாம்.

வீடியோ தொகுப்பு - இரா.குருமூர்த்தி, இடைநிலை ஆசிரியர், ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, மு.களத்தூர், தொட்டியம் ஒன்றியம், திருச்சி மாவட்டம்.

குறுந்தகடுகள் பெற விரும்புவோர் 9791440155 என்ற எண்ணுக்குத் தொடர்புகொள்ளலாம். நன்றி.