Title of the document


பள்ளிகளில், அடிப்படை வசதிகள் இல்லாதது குறித்து, பதிலளிக்கும்படி, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு, மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுஉள்ளது.

தமிழ்நாடு மக்கள் நுகர்வோர் பேரவையின் பொதுச்செயலர், ஜாபர் அலி, மாநில மனித உரிமைகள் ஆணையத்தில் தாக்கல் செய்த மனு:

திருநெல்வேலி மாவட்டத்தில், தனியார் பள்ளிகள் அதிகரித்துள்ளன.அவற்றில், எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை. ஆனால், பல்வேறு வகையில், நன்கொடைகள், வாகன கட்டணம் உள்ளிட்டவை வசூலிக்கப்படுகின்றன; இதற்கான ரசீதும் வழங்கப்படவில்லை. இந்த பள்ளிகள் மீது, மாவட்ட நிர்வாகம், எவ்வித நடவடிக்கையும் எடுப்பதுஇல்லை.இவ்வாறு, மனுவில்கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த, நீதிபதி துரை ஜெயச்சந்திரன், ''இந்த மனு தொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், நான்கு வாரத்தில், விரிவான அறிக்கை அளிக்க வேண்டும்,'' என, உத்தரவிட்டார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post