Title of the document


வருமான வரி செலுத்தத் தவறியோர், இனி அபராதம் மட்டுமே செலுத்தி விட்டு தப்ப முடியாத வகையில் வருமான வரி விதிகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியமானது வெள்ளிக்கிழமை இரவில் திருத்தப்பட்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாடுகளில் சட்டவிரோதமாக வங்கிக் கணக்கு வைத்திருப்போரும், சொத்து வைத்திருப்போரும் அதிகாரிகளிடம் சிக்கும் போது, வரியும் அபராதமும் செலுத்தி விட்டு தப்பிக்க முடியாது. கருப்புப் பண ஒழிப்புச் சட்டத்தின் கீழ் இந்த விவகாரத்தில் இனி சமரசத்திற்கு இடமில்லை.

புதிய விதிகளின் கீழ் இது கடும் குற்றமாக கருதப்படும். ஆதாயத்தில் இருந்து கழிக்கப்படும் வரி மற்றும் ஆதாயத்தில் இருந்து வசூலிக்கப்படும் வரியை செலுத்த தவறுதல் ஆகியவை சமரசத்திற்கு உகந்தது. இந்த புதிய விதிமுறையானது இன்று முதல் அமலுக்கு வந்தது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post