60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர்... பள்ளிக்கல்வித் துறை அதிரடி

Add This Number In Your Whatsapp Groups - 9786053272
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்புகளில் 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்று விகிதாச்சார முறையை மாற்றி பள்ளிக்கல்வித்துறை புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

பள்ளிக்கல்வி துறையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு கல்வித்தரம் உயர்த்தப்பட்டு வருகிறது. இதனால், இந்த கல்வியாண்டில் 2 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவிற்கு திட்டங்கள் வகுக்கப்பட்டு வருகின்றன.

70 லட்சம் மாணவர்களுக்கு ஸ்மார்ட் கார்டுகள். மாணவர்களின் கல்விக்கென தனி தொலைக்காட்சி , மொபைல் ஆப் மூலம் மின்னனு நூலக சேவை உள்ளிட்ட ஏராளமான அறிவிப்புகளை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.

அதே நேரம், புதிய பாடத் திட்டங்கள் தொடங்கி கற்பித்தல் முறைகளிலும் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது. மேல்நிலைப் பள்ளிகளில் பிளஸ்-1, பிளஸ்-2 வகுப்பு படிக்கின்ற மாணவர்கள்- ஆசிரியர் விகிதாச்சார முறை மாற்றப்பட்டுள்ளது. இதுவரையில் 40 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் நிர்ணயிக்கப்பட்டு கற்பித்தல் நடைபெற்றது. இப்போது 60 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற அடிப்படையில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

பள்ளிக்கல்வித் துறையின் மூலம் அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் இதுபற்றி சுற்றறிக்கை அனுப்பப்பட்டு பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது பிளஸ்-1 வகுப்பு தொடங்கப்பட்டுள்ளது. புதிய வகுப்புகளில் மாணவர்கள் புதிய விகிதாச்சார அடிப்படையில் கற்பித்தல் முறையை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது தொடக்கப் பள்ளிகளுக்கு (1 முதல் 5) 1:30 என்றும் நடுநிலைப்பள்ளிகளுக்கு (6 முதல்8) 1:35 என்றும் உயர் வகுப்புகளுக்கு (8 முதல்10) 1: 40 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, கடந்த ஏப்ரல் மாத ஊதியத்தை பெறாத 8,462 ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில், கடந்த 2011ம் ஆண்டு 1,590 முதுநிலை ஆசிரியர்கள், 6,872 பட்டதாரி ஆசிரியர்கள் புதிதாக நியமிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here

Post a Comment

0 Comments