Title of the document

11, 12-ம் வகுப்புகளுக்கு 600 மதிப்பெண்களுக்கு பதில் 500 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்பது தவறான தகவல் என்று சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். 11 மற்றும் 12ம் வகுப்புகளில் இரு மொழிப் பாடங்களுக்கு பதிலாக ஒரே மொழிப்பாடம் தேர்வு செய்யும் முறையை அமல்படுத்தலாம் என்று தமிழக அரசுக்கு பள்ளிக்கல்வித் துறை பரிந்துரை செய்திருந்தது. இது அமலுக்கு வரும்பட்சத்தில் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் ஆகிய இரண்டில் ஒரு மொழிப்பாடத்தை மட்டும் தேர்வு செய்துகொள்ளலாம். இதனால் 11 மற்றும் 12ஆம் வகுப்பில் 6 பாடங்களுக்கு பதிலாக 5 பாடங்களாக மாற்றம் பெறும் என்றும் பாடத்துக்கு 100 மதிப்பெண் வீதம் 600 ஆக உள்ள மொத்த மதிப்பெண் அளவு இனி 500 மதிப்பெண் ஆக மாற்றம் செய்யப்படும்.


இந்நிலையில் 11, 12-ம் வகுப்புகளுக்கு தமிழ், ஆங்கில மொழிப்படங்கள் உட்பட 6 பாடங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி அளித்தார். பின்னர் அவர் கூறியதாவது; தற்போதைய தேர்வு முறைகளில் மாற்றங்கள் செய்வது குறித்து எந்தவித முடிவும் எடுக்கப்படவில்லை. மதிப்பெண்கள் மாற்றப்படுவது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்டப்பின்னரே முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்தார். பள்ளியில் தமிழ், ஆங்கில மொழிப்படங்கள் உட்பட 6 பாடங்கள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்று தெரிவித்தார். உரிமம் இன்றி செயல்படும் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டாம் என்று பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

புதிய பாடத்திட்டம்

பாடத்திட்டங்கள் மாற்றப்பட்டு புதிதாக அச்சிடப்பட்ட புத்தகங்கள் இன்று அல்லது நாளை மாலைக்குள் பள்ளிகளுக்கு அனுப்பப்படும். இன்னும் 2 நாட்களுக்குள் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்ட புத்தகங்கள் வழங்கப்படும் என்று தெரிவித்தார். மேலும் ஒரு வாரத்தில் பொதுத்தேர்வு அட்டவணைகள் வெளியிடப்படும் என்று கூறினார்.

பள்ளிகளில் தண்ணீர் பிரச்சனை இல்லை

தமிழகத்தில் எந்த அரசு பள்ளியிலும் தண்ணீர் பிரச்சனை காரணமாக கழிவறைகள் மூடப்படவில்லை என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக சில பள்ளிகளில் கழிவறைகள் மூடப்பட்டதாக கூறப்படுவது தவறான தகவல் என்று கூறினார். ,மேலும் அரசு பள்ளிகளில் தண்ணீர் தட்டுப்பாடு குறித்து புகார் அளித்தால் 24 மணி நேரத்தில் சரிசெய்து தரப்படும் என்று தெரிவித்துள்ளார்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post