Title of the document

ஆந்திராவில் புதிதாக பதவிக்கு வந்துள்ள முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, அம்மாநிலத்தின் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு 7 ஆயிரம் ரூபாய் வரை சம்பளத்தை உயர்த்தி அறிவித்துள்ளார்.சமீபத்தில் நடந்த லோக்சபா மற்றும் ஆந்திரமாநில சட்டமன்ற தேர்தல்களில் ஒய்.எஸ்.ஆர்.,காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றது. ஆட்சிக்கு வந்த புதிய முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தனது முதல் உத்தரவாக,

அம்மாநில முதியோர் உதவித்தொகையை உயர்த்தி அறிவித்திருந்தார்.இந்நிலையில் இன்று ( ஜூன் 3) ஆந்திராவில் நீண்டகாலமாக சம்பள உயர்வு கேட்டு போராடி வரும் அம்மாநிலத்தின் அங்கன்வாடி மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு ரூ.3 ஆயிரமாக இருந்த சம்பளத்தை 7 ஆயிரம் ரூபாய் வரை உயர்த்தி 10 ஆயிரமாக அறிவித்துள்ளார். இது அம்மாநில சமானிய மக்களிடம் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Previous Post Next Post