Title of the document

மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த, குழு அமைக்கப்படும்,'' என, மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் தெரிவித்தார்.சென்னை மாநகராட்சி கல்வித் துறையில், 281 பள்ளிகள் செயல்படுகின்றன. இப்பள்ளிகள், 2018 - 19 கல்வியாண்டில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகளில் பின்தங்கியது.கல்வித் துறையை மேம்படுத்த, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், 2019 - 20 கல்வியாண்டில், மாணவர் சேர்க்கை அதிகரித்தல் தொடர்பான ஆய்வுக் கூட்டம், மாநகராட்சி கமிஷனர், பிரகாஷ் தலைமையில், ரிப்பன் மாளிகை வளாகத்தில் உள்ள, 'அம்மா' மாளிகையில், நேற்று நடந்தது.


இக்கூட்டத்தில், கமிஷனர் பிரகாஷ் பேசியதாவது:மாநகராட்சி பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, எவ்வித இடர்ப்பாடும் இன்றி, மகிழ்ச்சி நிறைந்த சூழலை வழங்க வேண்டும். கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.கற்றல், கற்பித்தலில் மாறுதல் செய்ய வேண்டும். அனைத்து போட்டி தேர்வுகளையும் எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களை தயார்படுத்த வேண்டும். மாநகராட்சி கல்வி அலுவலர், கூடுதல் கல்வி அலுவலர் மற்றும் தலைமை ஆசிரியர்களை உள்ளடக்கிய வழிகாட்டுதல் குழு அமைத்து, தரமான கல்வியை உறுதி செய்ய வேண்டும்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post