Title of the document

வரும் கல்வியாண்டில் அரசு பள்ளிகளில் பயோ மெட்ரிக் முறை அமலாக இருப்பதால் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் விவரங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

வரும் கல்வியாண்டு முதல் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அறிமுகமாக இருக்கிறது.

இதனை முன்னிட்டு, பள்ளிக்கல்வித்துறை முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ், கடலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்துப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் அறிவுரைகளை வழங்கினார். அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் ஈஎம்ஐஎஸ் எனப்படும் கல்வியியல் மேலாண்மைத் தகவல் மையத்தின் இணையத்தளத்தில் தகவல்களை முழுமையாக பதிவிட அறிவுறுத்தப்பட்டுள்ளதுஇதன் வாயிலாகவே மாணவர்களின் திட்டங்களும், ஆசிரியர்களின் பொதுமாறுதல் கலந்தாய்வு, பதவி உயர்வு கலந்தாய்வு உள்ளிட்டவை நடைபெற உள்ளது. எனவே, பள்ளி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் அனைத்து தகவல்களும் பதிவேற்றப்பட வேண்டும். அரசுமற்றும் அரசு நிதிபெறும் பள்ளிகளில் பயோமெட்ரிக் முறை அமலாக இருப்பதால், ஆசிரியர்கள்,பணியாளர்களின் விவரங்கள் ஆன்லைனில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும்.

மேலும் அனைத்து மாணவர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட உள்ளதால், மாணவர்களின் புகைப்படம் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் பதிவேற்றும் பணிகளை விரைந்து முடிக்க தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post