Title of the document



அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், 40.66 லட்சம் மாணவ - மாணவியருக்கு, பள்ளி திறக்கும் நாளிலேயே, இலவச புத்தக பைகள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிகளில் சத்துணவு சாப்பிடும், மாணவ - மாணவியருக்கு புத்தக பைகளை வினியோகம் செய்யும் உரிமத்தை, டில்லியை சேர்ந்த தனியார் நிறுவனம் பெற்றுள்ளது.அந்நிறுவனம், மாவட்டம் தோறும் வினியோகம் செய்யும் வகையில், இரண்டு பேருக்கு, தயாரிப்பு பணியை வழங்கியுள்ளது.

சென்னை, சேலம், கோவை, மதுரை, நெல்லை, திருச்சி, ஈரோடு, நாமக்கல், கரூர், தர்மபுரி உட்பட, 100க்கும் மேற்பட்ட இடங்களில், புத்தக பைகள் தயாரிக்கும் பணி, தீவிரமாக நடந்து வருகிறது.ஜெ., முதல்வராக இருந்தபோது, பச்சை மற்றும் பிங்க் நிறங்களில், பைகள் வழங்கப்பட்டன

.நடப்பாண்டு, ஊதா நிறத்தில் வழங்கப்படும் பைகளில், ஜெ., மற்றும், முதல்வர், இ.பி.எஸ்., படங்களுடன், அரசு முத்திரையும் பிரின்ட் செய்யப்பட்டுள்ளன.பள்ளி திறக்க, 12 நாட்களே உள்ள நிலையில், சத்துணவு சாப்பிடும், 40.66 லட்சம் மாணவ - மாணவியருக்கு,புத்தக பைகள், இலவசமாக வழங்கப்பட உள்ளன.

இதில், 80 சதவீதம் பணிகள் முடிந்துள்ளதால், 26ம் தேதி முதல், பள்ளிகளுக்கு வினியோகம் செய்ய உள்ளதாக, தயாரிப்பாளர்கள் கூறினர்.பள்ளி திறக்கப்படும், ஜூன், 3ல், மாணவ - மாணவியருக்கு புத்தக பைகள் கிடைத்துவிடும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post