Title of the document

பொறியியல் கலந்தாய்வு: இன்று முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம்

*இளநிலை பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்க்கை பெறுவதற்கான ஆன்லைன் கலந்தாய்வில் பங்கேற்க, வியாழக்கிழமை (மே 2) முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது*

*இதற்கு www.tneaonline.in அல்லது www.tndte.gov.in ஆகிய இணையதளங்கள் மூலம் வீட்டில் இருந்தபடியே, விண்ணப்பிக்கலாம்*

*அண்ணா பல்கலைக்கழகத் துறைகள், அதன் உறுப்புக் கல்லூரிகள் மற்றும் தமிழகம் முழுவதும் உள்ள 500க்கும் அதிகமான பொறியியல் கல்லூரிகளில் இடம்பெற்றுள்ள அரசு ஒதுக்கீட்டு இளநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரம் நடத்துகிறது*

*இதுவரை இந்தக் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வந்தது. இந்தப் பொறுப்பு 2019-20ஆம் கல்வியாண்டு முதல் தொழில்நுட்ப கல்வி இயக்குநரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது*

*இதற்கு வீட்டில் இருந்தபடி ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க இயலாத அல்லது வசதி இல்லாத மாணவர்கள், அனைத்து மாவட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்கும் கலந்தாய்வு உதவி மையங்கள் மூலம் ஆன்லைன் விண்ணப்பப் பதிவை மேற்கொள்ளலாம். அவ்வாறு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க மே 31 கடைசி நாளாகும்*

*இதுதொடர்பான மேலும் விவரங்களைத் தெரிந்துகொள்ள 044 22351014, 22351015 ஆகிய தொலைபேசி எண்களைத் தொடர்புகொள்ளலாம்*

*♦♦தயார் நிலையில் இணையதளம்*

*பொறியியல் சேர்க்கை கலந்தாய்வுக்கு மாணவர்கள் விண்ணப்பிப்பதற்கான வலைதளம் www.tneaonline.in இன்னும் தயாராக இல்லை என செய்தி வெளியாகியுள்ளது. இது தவறான செய்தி. வலைதளம் நல்ல முறையில் இயங்கி வருகிறது*

*எனவே, மாணவர்கள் விண்ணப்பத்தை மே 2-ஆம் தேதி முதல் பதிவு செய்யலாம் என தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளார்*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post