Title of the document

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் பள்ளிகளுக்கு ஸ்மார்ட்போன், செல்போன், இருசக்கர வாகனங்கள் கொண்டுவரக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுதொடர்பாக உயர்நிலைப் பள்ளி கள், மேல்நிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:மாணவர்கள் காலை 9.15 மணிக்குள் பள்ளிக்கு வரவேண்டும். மேலும், இருசக்கர வாகனங்களில் வரக்கூடாது. செல்போன், ஸ்மார்ட்போன்களை பள்ளிக்கு கண்டிப்பாக எடுத்து வரக்கூடாது, மீறினால் அப்பொருட்கள் பறிமுதல் செய்யப்படும். பொருட்கள் திரும்ப வழங்கப்படமாட்டாது.

ஆடை வரம்பு

லோஹிப், டைட் பேண்ட் அணிந்து வரக் கூடாது. அரைக்கை சட்டை மட்டுமே அணிந்து வர வேண்டும். அதுவும் இறுக்கமாக, குட்டையாக இருக்கக் கூடாது. தலை முடியை சீரான முறையில் வெட்டி இருக்க வேண்டும், போலீஸ் கட்டிங் மட்டுமே அனுமதி.கறுப்பு கலர் சிறிய பக்கிள் கொண்ட பெல்ட் மட்டுமே அனுமதி. டக்-இன் செய்யும்போது சட்டை வெளியே வரக்கூடாது மற்றும் சீரற்ற முறையில் டக்-இன் செய்யக் கூடாது. மேல் உதட்டை தாண்டி முறுக்கு மீசை, தாடி வைக்கக் கூடாது. கைகளில் வளையம், கயிறு, செயின் அணியக் கூடாது. பிறந்தநாள் என்றாலும் சீருடையில் மட்டுமே வரவேண்டும்.

11 கட்டளைகள்

விடுமுறை எடுக்கும்போது பெற்றோர், ஆசிரியர்அனுமதிக் கையெழுத்து பெற்ற பிறகு மட்டுமே எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 கட்டளைகள் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post