தனியார் பள்ளிக்கு இணையான வசதிகள்: ஒத்தக்கடை அரசு பள்ளியில் சேர மாணவிகள் ஆர்வம்மதுரையில் தனியார் பள்ளி களுக்கு இணையான வசதி களுடன் இயங்கும் அரசு பெண் கள் மேல்நிலைப் பள்ளியில் சேர மாணவிகள் ஆர்வம் காட்டு கின்றனர்.

தமிழகத்தில் ஒவ்வொரு மாவட் டத்திலும் ஒரு அரசுப் பள்ளி யைத் தேர்வு செய்து முன்மாதிரிப் பள்ளியாக அரசு அறிவித்துள்ளது. முன்மாதிரிப் பள்ளிகளில் அடிப் படைக் கட்டமைப்பு, கல்வித் தரத்துக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. மதுரை மாவட்டத்தின் முன்மாதிரிப் பள்ளியாக உல கநேரியில் உள்ள யா.ஒத்த க்கடை அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளி அறிவிக்கப்பட் டுள்ளது. இப்பள்ளியில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை தமிழ் மற்றும் ஆங்கிலவழிக் கல்வி கற்பிக்கப்படுகிறது.

தற்போது பிளஸ் 2 வரை 1503 மாணவிகள் பயில்கின்றனர்.

விசாலமான வகுப்பறைகள், நவீன ஆய்வகம், சுகாதாரமான குடிநீர், கழிவறை, தூய்மையான வளாகம், விளையாட்டுப் பூங்கா, 3 ஸ்மார்ட் வகுப்பறைகள், செராமிக் பலகை , ஐஏஎஸ், நீட் பயிற்சி என தனியார் பள்ளிகளுக்கு இணை யான வசதிகள் இப்பள்ளியில் உள்ளன.

2019- 2020 கல்வியாண்டில் மாணவிகளின் சேர்க்கையை அதிகரிக்கும் திட்டத்துடன் பள்ளியின் சிறப்பம்சங்களைக் குறிப்பிட்டு ஆட்டோவில் பிரச்சாரம் செய்யப்படுகிறது. இப்பள்ளியில் பிள்ளைகளைச் சேர்க்குமாறு ஊர் முழுவதும் தனியார் நிறுவனங்கள் சார்பில் போஸ்டர் அடித்து ஒட்டியுள்ளனர். இதனால் பள்ளியில் மாணவிகள் சேர்க்கை அதிகரித்து வருகிறது.

தலைமை ஆசிரியை எச்.பங்கஜம் கூறியதாவது: ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி 2006-ல் தொடங்கப்பட்டது. இந்த 12 ஆண்டுகளில் பள்ளி பல்வேறு வளர்ச்சியைப் பெற்றுள்ளது. பள்ளியின் வளர்ச்சிக்கு அரசு, தனியார் நிறுவனங்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், வழக் கறிஞர்கள் உதவிகளைச் செய்து வருகின்றனர்.

கிராமப்புற மாணவிகளின் கல்வித்தரத்தை மேம்படுத்த நட வடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன. அதில் ஒன்றுதான் மாணவிகள் சேர்க்கையை அதிகப்படுத்த தனியார் நிறுவனங் களின் உதவியுடன் ஆட்டோவில் பிரச்சாரம் செய்வது, ஊரெல்லாம் போஸ்டர் ஒட்டுவது போன்ற நடவடிக்கை. இதனால் மாணவிகளின் எண்ணிக்கை 1800 ஆக உய ரும் என எதிர்பார்க்கிறோம். இந்தக் கல்வி ஆண்டிலிருந்து மழலையர் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை மாணவர்களையும் சேர்த்துக்கொள்ள அரசு அனுமதி வழங்கியுள்ளது என்றார். திருமோகூர், பெருங்குடி ஜெ.செந்தில்வேல்முருகன் கூறுகையில், அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்க வேண் டும் என்ற விழிப்புணர்வு பலரிடம் அதிகரித்து வருகிறது. இதற்கு முன்மாதிரியாகத் திகழும் சில அரசுப்பள்ளிகளும், அங்கு பணிபு ரியும் ஆசிரியர்களின் அர்ப் பணிப்பு உணர்வும்தான் காரணம்.

முன்மாதிரிப் பள்ளியான ஒத்தக்கடை அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளி இப்பகுதி மாணவிகளுக்கு வரப்பிரசாதமாக உள்ளது. பத்தாம் வகுப்பு வரை தனியார் பள்ளிகளில் பயின்ற மாணவிகள் இப்பள்ளியில் சேர விண்ணப்பம் அளிக்கின்றனர். அரசுப் பள்ளிகளை மேம்படுத்த வேண்டியது மாநில அரசின் கடமையாகும், என்றார்.