அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 7,000 ஆசிரியர் பணியிடம் விரைவில் நிரப்பப்படும்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தகவல்


அரசுப் பள்ளிகளில் காலியாகவுள்ள 7 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்பட உள்ளன என கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங் கோட்டையன் தெரிவித்தார்.

பழநியில் உள்ள தண்டாயுதபாணி சுவாமியை நேற்று தரிசனம் செய்த பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

தமிழக கல்வித் துறை இந்தியாவுக்கே முன்மாதிரியாகத் திகழ்கிறது. இந்த ஆண்டு 28 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்பட உள்ளது.உயர் கல்வியில் இந்தியாவின் இலக்கு 25.6 சதவீதம். ஆனால் தமிழகத்தில் 48.9 சதவீத அளவுக்கு உயர்ந்துள்ளது.

இந்த ஆண்டு புதிய திட்டமாக 9, 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு இணையத்துடன் கூடிய ஸ்மார்ட் வகுப்பறை, 6,7,8 வகுப்புகளுக்கு 7 ஆயிரம் பள்ளி களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.லேப்டாப் மூலம் புத்தகங்களை அறியும் புதிய திட்டம் அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. பள்ளிக் கல்வித் துறைக்காகப் பிரத்யேகமான தனி சேனல் ஏற்படுத்தப்பட்டு ரோபோ டிக்ஸ் போன்ற நவீன கல்வி முறை பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.

அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள 7 ஆயிரம் ஆசிரியர் பணி யிடங்கள் விரைவில் நிரப்பப்படஉள்ளன. வரும் கல்வியாண்டில் அனைத்து அரசுப்பள்ளிகளிலும் ஆங்கிலவழிக் கல்வி கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றார்.