பி.இ. கலந்தாய்வு: உதவி மையங்களின் எண்ணிக்கை 43ஆக உயர்வு: சென்னையில் கூடுதலாக ஒரு உதவி மையம்
*பொறியியல் மாணவர் சேர்க்கை ஆன்லைன் கலந்தாய்வுக்காக சென்னையில் தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் கூடுதலாக ஒரு உதவி மையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது*
*இதன் மூலம், கடந்த ஆண்டு 42ஆக இருந்த கலந்தாய்வு உதவி மையங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 43 ஆக அதிகரிக்கப்பட உள்ளது*
*இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் விவேகானந்தன் கூறியது*
*பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் வசதிக்காக, கடந்த ஆண்டைப் போலவே சென்னையில் மத்திய பாலிடெக்னிக் வளாகம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் 42 உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன*
*அதே நேரம், இந்த முறை கலந்தாய்வை தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் நடத்துவதால், ஏராளமான மாணவர்கள் இயக்குநர் அலுவலகத்தை நேரடியாக தொடர்பு கொள்கின்றனர்*
*எனவே, மாணவர்களின் வசதிக்காக, தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்திலும் கூடுதலாக ஒரு உதவி மையத்தை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது*
*இதன் மூலம், இந்த ஆண்டு தமிழகம் முழுவதும் 43 உதவி மையங்கள் செயல்பாட்டில் இருக்கும் என்றார் அவர்*
*♦♦உதவி மையங்களின் பட்டியல்*
*சென்னை தரமணி மத்திய பாலிடெக்னிக் கல்லூரி*
*கடலூர் திரு கொளஞ்சியப்பர் அரசு கலைஅறிவியல் கல்லூரி*
*சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக *பொறியியல்*
*தொழில்நுட்பத் துறை வளாகம்*
*காஞ்சிபுரம் பச்சயப்பன் மகளிர் கல்லூரி*
*காஞ்சிபுரம் மாவட்டம் குரோம்பேட்டை ஐஆர்டி பாலிடெக்னிக் கல்லூரி*
*திருவள்ளூர் மாவட்டம் ஆவடி முருகப்பா பாலிடெக்னிக் கல்லூரி*
*திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*வேலூர் தந்தை பெரியார் அரசு தொழில்நுட்ப நிறுவனம்*
*விழுப்புரம் சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*விழுப்புரம் திருக்கோவிலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*கோவை பீளமேடு அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*கோவை புது சித்தாபுதூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*கோவை தொழில்நுட்ப நிறுவனம் (சிஐடி)*
*தருமபுரி அரசு பொறியியல் கல்லூரி*
*ஈரோடு சக்தி பாலிடெக்னிக் கல்லூரி*
*ஈரோடு பெருந்துறை அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*கிருஷ்ணகிரி பர்கூர் அரசு பொறியியல் கல்லூரி*
*நாமக்கல் என்.கே.ஆர். அரசு மகளிர் கலைக் கல்லூரி*
*நீலகிரி அரசு கலைக் கல்லூரி*
*சேலம் ஓமலூர் அரசு பொறியியல் கல்லூரி*
*திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி*
*கரூர் தான்தோனிமலை அரசு கலைக் கல்லூரி*
*மதுரை தமிழ்நாடு பாலிடெக்னிக் கல்லூரி*
*மதுரை திருப்பரங்குன்றம் தியாகராஜர் பொறியியல் கல்லூரி*
*ராமநாதபுரம் பரமக்குடி அரசு கலைக் கல்லூரி*
*தேனி போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரி*
*திண்டுக்கல் ஜிடிஎன் கலைக் கல்லூரி*
*அரியலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*நாகப்பட்டினம் வலிவளம் தேசிகர் பாலிடெக்னிக் கல்லூரி*
*பெரம்பலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*தஞ்சாவூர் ரெகுநாதபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*தஞ்சை செங்கிப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி*
*திருச்சி துவாக்குடிமலை அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*திருச்சி ஸ்ரீரங்கம் அரசு பொறியியல் கல்லூரி*
*திருவாரூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*சிவகங்கை மாவட்டம் காரைக்குடி ஏ.சி. அரசு பொறியியல் தொழில்நுட்ப கல்லூரி*
*கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் தென் திருவாங்கூர் இந்து கல்லூரி*
*திருநெல்வேலி அரசு பொறியியல் கல்லூரி*
*திருநெல்வேலி காந்தி நகர் ராணி அண்ணா அரசு மகளிர் கல்லூரி*
*தூத்துக்குடி அரசு பாலிடெக்னிக் கல்லூரி*
*விருதுநகர் வி.வி.வன்னிய பெருமாள் மகளிர் கல்லூரி*
*ஆகிய 42 உதவி மையங்கள் ஏற்கெனவே ஏற்படுத்தப்பட்டுள்ளன*
*சென்னை தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக வளாகத்தில் 43 ஆவது உதவி மையமும் அமைக்கப்பட உள்ளது*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment