சி.பி.எஸ்.இ., தேர்வு முடிவு 2 வாரத்தில் வெளியாகும்
*சி.பி.எஸ்.இ., பிளஸ் 2 தேர்வு முடிவுகளை, இன்னும் இரண்டு வாரங்களில் வெளியிட, தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது*
*மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வுகள், பிப்., இரண்டாம் வாரம் துவங்கி, மார்ச்சில் முடிந்தது. மதிப்பெண் பட்டியல் தயாரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. தேர்வு முடிவுகளை, இரண்டு வாரங்களுக்குள் வெளியிட, சி.பி.எஸ்.இ., தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது*
*ஒவ்வொரு ஆண்டும், மே இறுதி வாரத்தில், தேர்வு முடிவுகள் வெளியிடப்படும். அதற்குள், மாநில அளவிலான தேர்வுகளின் முடிவுகள் வெளியாகி, பல கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை முடிந்து விடும்.இது குறித்து, டில்லி உயர் நீதிமன்றத்தில், மாணவர்கள் தரப்பில், 2018ல் வழக்கு தொடரப்பட்டது. இதை விசாரித்த உயர் நீதிமன்றம், பொது தேர்வை முன்கூட்டியே நடத்தி, தேர்வு முடிவையும் முன்கூட்டியே வெளியிட உத்தரவிட்டது*
*இதையடுத்து, வழக்கமாக மார்ச்சில் துவங்கும் பொதுத் தேர்வு, இந்த ஆண்டில், பிப்ரவரியிலேயே துவங்கி விட்டது*
*விடைத்தாள் திருத்த பணிகளும் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. எனவே, இந்த ஆண்டு, மே இரண்டாம் வாரத்தில் தேர்வு முடிவு வெளியாகி விடும் என, சி.பி.எஸ்.இ., வட்டாரங்கள் தெரிவித்துள்ளன*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment