Title of the document

தகுதி தேர்வில் தோற்ற, 1,500 ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்கவும், அவர்களுக்கு கூடுதல் அவகாசம் தரவும், பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டு உள்ளது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம் வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், 'டெட்' எனப்படும், ஆசிரியர் தகுதி தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். இதற்கான சட்டம், 2010 ஆக., 23ல், அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தின் படி, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களுக்கு, ஒன்பது ஆண்டு அவகாசம் வழங்கப்பட்டது

கடந்த, 2010 முதல், பணியில் சேர்பவர்கள், தகுதி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பதற்காக, அரசின் சார்பில், நான்கு முறை, டெட் தேர்வு நடத்தப்பட்டது. இப்படி, ஒன்பது ஆண்டுகளாக அவகாசம் வழங்கப்பட்டும், தேர்வில் தேர்ச்சி பெறாத காரணத்தால், அரசு உதவி பள்ளிகளில் பணியாற்றும், 1,500 ஆசிரியர்களின் சம்பளம் நிறுத்தப்பட்டது.இவர்கள் அனைவரையும், வேலையை விட்டு அனுப்பவும், பள்ளி கல்வித்துறை திட்டமிட்டது.

இதற்கு எதிரான வழக்கிலும், அரசுக்கு சாதகமான தீர்ப்பு கிடைத்தது. இந்த உத்தரவை எதிர்த்து, ஆசிரியர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்துள்ளனர்.இந்நிலையில், 1,500 ஆசிரியர்களுக்கும் நிறுத்தப்பட்ட சம்பளத்தை வழங்க, பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது. மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள, தகுதி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு, அவர்களுக்கு கூடுதல் அவகாசம் வழங்கவும் முடிவு செய்யப்பட்டது.

அதற்காக, 1,500 ஆசிரியர்களுக்கு, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், 10 நாட்கள் சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த பயிற்சிக்கு பெயர் பதிவு செய்து, தகுதி தேர்வுக்கு தயாராகுமாறு, ஆசிரியர்களுக்கு கல்வித்துறை உத்தரவிட்டுஉள்ளது

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post