Title of the document


''மாணவர்கள் தங்கி பயிற்சி பெறும் வகையில், பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது,'' என, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர், கே.சிவன் தெரிவித்தார்.

இஸ்ரோ நிறுவனம், 'பி.எஸ்.எல்.வி., - சி 45' ராக்கெட் உதவியுடன், 'எமிசாட்' உட்பட, 29 செயற்கைக்கோள்களை, இன்று காலை, 9:27 மணிக்கு விண்ணில் செலுத்துகிறது.'கவுன்ட் டவுன்'ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, ஏவுதளத்தில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டின்,'கவுன்ட் டவுன்' நேற்று காலை, 6:27க்கு துவங்கியது.இது குறித்து, சென்னை விமான நிலையத்தில், சிவன் அளித்த பேட்டி:பி.எஸ்.எல்.வி., - சி 45 ராக்கெட்டின் சிறப்பம்சம் என்னவெனில், ஒரே ராக்கெட், மூன்று விதமான புவிவட்டப் பாதையில், செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்த உள்ளது.

முதல் கட்டமாக, இஸ்ரோவின், எமிசாட் செயற்கைக்கோள், புவி வட்டப் பாதையில் நிலைநிறுத்தப்படும்.பின், வேறு பாதையில், மற்ற செயற்கைக்கோள்கள் அடுத்தடுத்து நிலைநிறுத்தப்படும். ராக்கெட் விண்ணில் ஏவப்படுவதை பார்க்க, முதல் முறையாக பொதுமக்கள் அனுமதிக்கப்பட உள்ளனர்.



15 நாட்கள்

உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், கோடை விடுமுறையில், இஸ்ரோ மையங்களில், 15 நாட்கள் தங்கி, பயிற்சி பெறும் வகையில், பயிற்சி திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.அதற்கு, நாடு முழுவதிலும் இருந்து, 108 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர்; அரசு பள்ளி மாணவர்களும் பங்கேற்கலாம்.இவ்வாறு, அவர் கூறினார்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post