இன்று பத்தாம் வகுப்புக்கு, 'ரிசல்ட்' - மறுகூட்டல் எப்படி?மறுகூட்டல் எப்படி?

மதிப்பெண் குறைவாக இருப்பதாக கருதுவோர், தங்கள் விடைத்தாளின் மதிப்பெண்ணை மறுகூட்டல் செய்துக்கொள்ளலாம். இதற்கு, வரும், 2ம் தேதி முதல், 4ம் தேதி மாலை, 5:45 மணி வரை பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்கள் வழியே, விண்ணப்பிக்க வேண்டும். மொழி பாடங்களுக்கு தலா, 305 ரூபாய், விருப்ப மொழி பாடம் மற்றும் முக்கிய பாடங்களுக்கு தலா, 205 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். இதற்கு விண்ணப்பம் அளிப்பவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்ட ஒப்புகை சீட்டை, பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அந்த விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தி, மறுகூட்டல் முடிவை தெரிந்துக் கொள்ளலாம்.

மறுதேர்வு

இந்த தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், விண்ணப்பித்து தேர்வு எழுதாதவர்களுக்கு, ஜூன், 14 முதல், 22ம் தேதி வரை, சிறப்பு தேர்வு நடத்தப்படும். இதற்கான விண்ணப்ப தேதி, பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை, அரசு தேர்வுத் துறைஇயக்குனர், வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.