Title of the document


2009  TET போராட்டக் குழுவில் இன்றைய 04.04.2019 வழக்கு விசாரணை விவரம்


இன்று நமது வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு எட்டப்பட்டது விசாரணையின் பொழுது மற்றொரு தரப்பு மத்திய அரசுக்கு  இணையான ஊதியம் 9300 கோரி தொடர்ந்த வழக்கில் அரசின் பதில் மனு தாக்கல் செய்யப்படவில்லை, என்ற வாதத்தை  முன் வைத்தனர் அதனை மறுத்த நமது வழக்கறிஞர்கள் அந்த வழக்கை வேறு இந்த வழக்கு வேறு அதன் சாராம்சம் வேறு ஆகவே அதனை தனியாக விசாரிக்கும் படி கேட்டுக்
கொண்டனர் நீதியரசர் அவர்களும் அதனை ஏற்று அந்த வழக்கை தனியாக பிரித்து விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்துவிட்டனர்.


இனி அந்த வழக்கு நமது வழக்குடன் இணைந்து விசாரணைக்கு வராது.


 மேலும் நமது வழக்கில் அனைத்து விதமான சட்ட வழிமுறைகளும்( PAPER WORK) முடிந்துவிட்டன இறுதி கட்ட விசாரணை  மட்டும்தான்  உள்ளது. ஆகவே அதற்கான நாளை குறித்து தருமாறு நீதியரசரிடம் நமது தரப்பு வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்தனர். அதனைக் கேட்ட நீதியரசர் உடனடியாக இந்த வழக்கை விசாரித்து முடிக்க வேண்டும் கட்டாயம்  என்ன வினா எழுப்பினர் ??

நமது தரப்பில் பழைய ஊதியம் தற்போது வரை அதிகமான எண்ணிக்கையில் பெற்றுக் கொண்டே இருந்திருந்தால் அதனை நாம் குறிப்பிட்டு இருப்போம் ஆனால் அவ்வாறு இல்லாத காரணத்தினால் அந்த வாதத்தை முன் வைக்காமல் 10 ஆண்டுகளாக  வாழ்வாதாரம் பாதிப்பு தொடர்ந்து கொண்டிருக்கிறது தற்போதய ஏழாவது ஊதியக் குழுவிலும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது எனவே இதை உடனடியாக முடித்துக் கொடுக்க வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கப்பட்டது, அதனை ஏற்ற நீதியரசர் வரும் ஏப்ரல் 29-ம் தேதி இறுதி கட்ட விசாரணையை வைத்து கொள்ளலாம் என்று கூறி இறுதிக்கட்ட விசாரணை (FINAL ARGUMENT) தேதியை குறிப்பிட்டு வழக்கை ஒத்திவைத்துள்ளார்.



நமது வழக்கு இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது மிக விரைவில் நம் கண்ணீருக்கு நல்ல முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தகவல் பகிர்வு
மாநில தலைமை
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post