டிஇடி தேர்வுக்கு விண்ணப்பிக்க தேதி நீட்டிப்பு.. தகுதி குளறுபடியால் பட்டதாரிகள் தவிப்பு
*ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கடைசி நாள் 12ம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது*
*அரசு தொடக்கப் பள்ளிகள், உயர்நிலைப் பள்ளிகள், மேனிலைப் பள்ளிகளில் ஆசிரியர்களாக பணியாற்ற வேண்டும் என்றால் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்*
*கடந்த 2012ம் ஆண்டு முதல் தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்கிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு மே மாதம் நடக்க உள்ளது. இதற்கான அறிவிப்பு கடந்த மாதம் வெளியானது*
*அதன்படி, மார்ச் 15ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்து இருந்தது. நேற்றுடன் விண்ணப்பிக்கும் நேரம் முடிந்தது*
*ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் ஏற்பட்டுள்ள சில பிரச்னை காரணமாக பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பட்டதாரிகள் விண்ணப்பிக்க முடியாமல் போனது*
*இதையடுத்து, பல்வேறு கோரிக்கைகள் ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வந்தன. அதன் பேரில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் இறுதி நாள் 12ம் தேதி வரை நீட்டித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது*
*இருப்பினும், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில் (6வது விதி) தெரிவித்துள்ளபடி ஏதாவது ஒரு பட்டம் பெற்று அத்துடன் பிஎட் பட்டம் பெற்றவர்களும் இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று உள்ளது*
*அதன்படி பிஎஸ்சி கணினி அறிவியல் படித்தவர்கள் விண்ணப்பிக்க விரும்பினால், ஆன்லைன் விண்ணப்பத்தில் அதற்கான இடம் ஒதுக்கவில்லை. அதனால் அந்த பாடம் படித்தவர்கள் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது*
*அதேபோல இதர பாடங்களை படித்தவர்களும் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இடைநிலை ஆசிரியருக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அந்த நபரின் இ-மெயில் ஐடி, செல்போன் எண் கேட்கிறது. அதை பூர்த்தி செய்தால் விண்ணப்பம் பதிவேற்றம் ஆகிறது*
*அதேநபர் பட்டதாரிக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது மேற்கண்ட ஒரே மெயில் ஐடி, செல்போன் எண்களை கொடுத்தால் அந்த விண்ணப்பத்தை ஏற்க மறுக்கிறது*
*அதனால், இரண்டு தேர்வுகளும் எழுத விரும்புவோர் இரண்டு மெயில் ஐடி, செல்போன் எண்கள் வைத்திருக்க வேண்டுமா என்ற கேள்வி எழுகிறது*
*இதனாலும் விண்ணப்பிக்க முடியவில்லை என்று பட்டதாரிகள் புலம்புகின்றனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் விளக்க வேண்டும் என்று அவர்கள் எதிர்பார்க்கிறார்கள்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment