டிப்ளமோ படித்தவர்களுக்கு மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனத்தில் வேலை

Join Our KalviNews Telegram Group - Click Here
 

எம்.ஆர்.பி.எல். எனப்படும் மங்களூர் பெட்ரோகெமிக்கல் மற்றும் சுத்திகரிப்பு நிறுவனம் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ளது. இந்த நிறுவனத்தில் பட்டதாரிகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்கள் பிரிவில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. முக்கியத் தேதிகள் ஆன்லைனில் விண்ணப்பப் பதிவு ஆரம்பித்த நாள் - ஏப்ரல் 18, 2019 ஆன்லைனில் விண்ணபிக்க கடைசி நாள் - ஏப்ரல் 17, 2019 பணி இடங்கள் பட்டதாரி பயிற்சி பணிக்கு 87 இடங்களும், டெக்னீசியன் பயிற்சிப்பணிக்கு 108 இடங்களும் என மொத்தம் 195 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
கல்வித்தகுதி என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்தவர்கள், பட்டதாரி பயிற்சிப் பணியிடங்களுக்கும், டிப்ளமோ என்ஜினீயரிங் படித்தவர்கள் டெக்னீசியன் பயிற்சிப் பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்கலாம். ஊக்கத்தொகை பட்டப்படிப்புடன் பணிக்குச் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.10,000 டிப்ளமோ படித்துவிட்டு பணிக்குச் சேர்பவர்களுக்கு மாதம் ரூ.7,100 விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கலாம். எழுத்துத் தேர்வு மூலம் தகுதியுடையர்கள் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடக்கும் தேதி பின்னர் எம்.ஆர்.பி.எல். இணையதளத்தில் வெளியிடப்படும். தேதி அறிவிக்கப்பட்ட 15 நாட்களில் அட்மிட் கார்டை இணையதளத்தில் டவுன்லோட் செய்யலாம்.
மேலும் விவரங்களுக்கு https://www.mrpl.co.in/ என்ற இணையதளத்தில் பெறலாம்.
இந்த பயனுள்ள தகவலை அனைத்து வாட்ஸ்அப் குழுக்களிலும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்..

கருத்துரையிடுக

0 கருத்துகள்