Title of the document
இன்று 25.04.2019 மதுரை உயர்நீதிமன்றத்தில்
அங்கன்வாடி மைய வழக்கு விசாரணை முடிந்தது*
*இன்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு அமர்த்துவது சார்பான வழக்கு விசாரணை 31 வழக்காக பட்டியலில் இடம் பெற்றிருந்தது அரசு தரப்பில் காலையே இந்த வழக்கு இன்று விசாரணை செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்ளப்பட்டது அதன்பேரில் மாலை 4 மணிக்கு மேல் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, விசாரணையின்போது அரசு தரப்பில் NCTE விருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்ட கடிதத்தினை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது அந்த கடிதத்தில் இடைநிலை ஆசிரியர்களை (Bridge Course) ஆறுமாத பயிற்சிக்குப் பின்னர் முன்பருவ கல்வியான அங்கன்வாடி மையத்தில் பணியமர்த்தலாம் என்ற  அடிப்படையில் கடிதம் வழங்கப்பட்டுள்ளது. அதனையடுத்து அரசு தரப்பில் அரசு பள்ளிகளில் 1700க்கும் மேற்பட்ட பணியிடங்களும் உதவிபெறும் பள்ளிகளில் 5300க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர் வருடத்திற்கு 400 கோடி ரூபாய்க்கு மேல்  செலவாகிறது என்ற வாதத்தை முன்வைத்தனர் உபரி ஆசிரியர்களை மாநிலம் முழுவதும் கலந்தாய்வு வைத்து மாறுதல்கள் வழங்கி விட்டு பின்னர் மீதம் இருக்கும் உபரி ஆசிரியர்களை வேண்டுமானால் அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றிக்கொள்ளுங்கள் மேலும் மாற்றப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் பள்ளிக்கு திரும்பும் வரை புதிய நியமனங்கள் எதுவும் மேற்கொள்ளக் கூடாது எனவும் நீதியரசர்கள் கூறினார். விரைவில் நீதிமன்ற ஆணை வெளியாகும் என தகவல் வெளியாகிறது அதில் முழு விபரங்களும் குறிப்பிடப்படும்.*
*வழக்குத் தொடுத்த நாள் முதல் இந்நாள் வரை ஒவ்வொரு நாளும் விசாரணை பட்டியலில் இடம் பெறும் நாள்களில் நமது வழக்கறிஞரும் நமது சார்பாகவும்  தொடர்ந்து நேரில் இந்த வழக்கினை தொடர்ந்து  கண்காணித்து நடத்தி வருகின்றார்*
*மாநில தலைமை*
*2009&TET போராட்டக்குழு*
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post