Title of the document




தேனி மக்களவை தொகுதி தேர்தல் பணிகளில் நோய்வாய்ப்பட்டவர்கள், உடல்நிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்க தேனி கலெக்டர் முன்வரவேண்டும் என அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கை எழுப்பியுள்ளனர். தேனி மக்களவை தேர்தல், பெரியகுளம், ஆண்டிபட்டி சட்டசபை தேர்தல்களுக்கு ஏப்.18ந்தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக மாவட்டம் முழுவதிலும் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், பட்டியல் தயார்செய்யப்பட்டும் பணிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக மாவட்ட அளவில் முதல்கட்ட பயிற்சி தொடங்கி உள்ளது. இதில் பணி வழங்கப்பட்ட அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டுள்ளனர். அடுத்த கட்ட பயிற்சி வரக்கூடிய நாட்களில் நடக்க உள்ளது.

அரசு ஊழியர்களில் நோய்வாய்ப்பட்டவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களும் அதிகளவில் உள்ளனர். இவர்கள் தங்களை தேர்தல் பணிகளில் சேர்க்க வேண்டாம் என ஏற்கனவே தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் முறையிட்டாலும், கட்டாயமாக வந்தே ஆகவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் சிறப்பு பயிற்சி வகுப்புகளில் கட்டாயம் கலந்து கொள்ளவேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டு நோட்டீஸ்கள் அளிக்கப்பட்டுள்ளன. இதனால் உடல்நலம் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சோகத்தின் உச்சத்தின் உள்ளனர்.


தங்களால் முடியாத இந்தபணிகளால் தேவையில்லாத டென்ஷன், மனஉளைச்சல் உண்டாவதோடு மேலும் நோய் அதிகரிக்கும் வாய்ப்பு உண்டாகும். எனவே தேர்தல் பணிகளில் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களுக்கு விதிவிலக்கு அளிக்கவேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. இவர்கள் முறையாக மருத்துவ சான்றிதழ், அதற்கான பைல் போன்றவற்றை நேரில் போய் அளித்தாலும் உடனடியாக விலக்கு அளிக்காத நிலை உண்டாகி உள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், `` மக்களவை மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகளில் உடனடியாக உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளவர்களை மனிதாபிமான அடிப்படையில் பணிக்கு நியமிப்பதில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும். இல்லாவிட்டால் தேவையில்லாத டென்ஷனாகி உடல் நலத்திற்கு மேலும் பிரச்னைகள் உருவாக வாய்ப்புகள் உள்ளன'' என்றனர்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post