நாளை (ஏப்.,6) தெலுங்குவருடப் பிறப்பு விடுமுறை நாளிலும், விடைத்தாள்களை திருத்தும் பணி மேற்கொள்ள வலியுறுத்துவதால், ஆசிரியர்கள் மனஉளைச்சலில் உள்ளனர்.பத்தாம்வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்களை ஏப்.,1 முதல் திருத்தும்பணியில் ஆசிரியர்கள் ஈடுப்பட்டுள்ளனர். ஞாயிறு விடுப்பின்றி தொடர்ந்து பணி செய்து வருகின்றனர். நாளை (ஏப்.,6) தெலுங்கு வருடபிறப்பு அரசு விடுமுறை நாளை ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் அன்றும் விடைத்தாள் திருத்தும்பணி மேற்கொள்ள உயர்அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.ஏப்.,7 ஞாயிறு அன்று தேர்தல் பயிற்சி வகுப்பு உள்ளது. தொடர்ந்து ஓய்வு இல்லாமல் பணிசெய்வதால் மனஉளைச்சலாக உள்ளது. வேலைப்பளுவால் சிரமப்படுகிறோம் என புலம்புகின்றனர்.
தெலுங்கு வருடப் பிறப்பு நாளிலாவது ஓய்வு தரவேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தினர்.
Post a Comment