'கடந்த, 2018 - 19ம் நிதியாண்டு, வருமான வரி கணக்கு தாக்கலுக்கான
விண்ணப்பத்தை, இணைய தளத்தில் இருந்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்' என,
வருமான வரித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக, அவர்கள் கூறியதாவது:
கடந்த, 2018 - 19ஆம் நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல், ஏப்., 1 முதல் துவங்கியுள்ளது. கணக்கு தாக்கல் செய்வதற்கு, வருவாய்க்கு ஏற்ற வகையில், ஒன்று முதல், ஏழு வரை விண்ணப்பங்கள் உள்ளன. தற்போது, ஒன்று, நான்கு ஆகிய இரு விண்ணப்ப படிவங்கள், www.incomtaxindiaefiling.gov.in என்ற, இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன.
ஆண்டுக்கு, 50 லட்சம் ரூபாய் வரை வருவாய் ஈட்டுவோர், இந்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, கணக்கு தாக்கல் செய்யலாம். ஆன்லைன் வழியாகவும் கணக்கு தாக்கல் செய்யலாம். இதர விண்ணப்பங்கள் விரைவில், பதிவேற்றம் செய்யப்படும்.இவ்வாறு, வருமான வரித் துறை அதிகாரிகள் கூறினர்.

Post a Comment