வாக்களிக்க தேவையான அடையாள அட்டைகள் எது தெரியுமா?

வாக்களிக்க தேவையான அடையாள அட்டைகள் எது தெரியுமா?

*வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் 11 வகையான ஆவணங்களைப் பயன்படுத்தி தேர்தலில் வாக்களிக்கலாம்*

*மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு புகைப்படங்களுடன் கூடிய 11 வகையான ஆவணங்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம்*

*வாக்காளர்கள், தங்கள் வாக்கை பதிவு செய்யவதற்கு முன்னர், வாக்குச்சாவடியில் தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்துவதற்கான வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையை அளிக்க வேண்டும்*

*வாக்காளா் புகைப்பட அடையாள அட்டை இல்லாதவா்கள், கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்), ஓட்டுநர் உரிமம், மத்திய, மாநில அரசுத் துறைகளில் பணிக்காக வழங்கப்பட்டுள்ள புகைப்பட அடையாள அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி அல்லது அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், நிரந்தர வருமானவரி கணக்கு எண் (பான் கார்டு), தேசிய மக்கள் தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமைப் பதிவாளரால் வழங்கப்பட்ட மின்னணு அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, தொழிலாளர் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவக் காப்பீட்டு மின்னணு அட்டை ஆகியவற்றை பயன்படுத்தலாம்*

*மேலும், புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், சட்டப்பேரவை மற்றும் மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை, ஆதார் அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒன்றை பயன்படுத்திக் கொள்ளலாம்*

*வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் அச்சுப்பிழைகள், எழுத்துப் பிழைகள் போன்றவற்றை பொருட்படுத்த தேவையில்லை*

*எனவே, வாக்காளர்கள் மேற்கூறிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை பயன்படுத்து ஏப்.18 ஆம் தேதி தவறாமல் தங்களது வாக்கை பதிவு செய்யலாம்*