Title of the document


விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் தேர்தல் பணிக்கான பயிற்சி வகுப்பில் கலந்து கொள்ள ஆசிரியர் அரசு ஊழியர்கள் 1600 க்கும் மேற்பட்டவர்கள் இங்குவந்திருந்தனர். பயிற்சிக்கு வந்திருந்த 1600 மேற்பட்டோரில் 600 பேருக்கு மட்டுமே தபால் வாக்கு  சீட்டுகள் வந்திருந்தது அவர்களுக்கு தேர்தல் ஆணையம் பயிற்சியின் போதே தபால் வாக்கு சீட்டுக்கள் கொடுத்து வாக்களித்து அங்குள்ள பெட்டியில் போடுமாறு ஏற்கனவே அறிவித்திருந்தது.

ஆனால் ஊழியர்களோ ஏன் மற்றவர்களுக்கெல்லாம் வரவில்லை, தபால் ஓட்டுக்களை இங்குள்ள பெட்டியில் போடமாட்டோம் இதில் போட்டால் அது சரியான முறையில் ஓட்டு எண்ணும் மையங்களுக்கு போய் சேருமா என்பதில் எங்களுக்கு சந்தேகம் உள்ளது. எனவே ஓட்டு சீட்டை கையோடு எடுத்து சென்று பூர்த்தி செய்து எங்களுக்கு விருப்பட்டவர்களுக்கு விருப்பமானவர்கள் மூலம் வாக்கு எண்ணும் மையத்திற்கு கொடுத்தனுப்புவோம் என்று சொல்ல அதிகாரிகள் இங்குள்ள பெட்டியில் தான் போட வேண்டும் என்று சொல்ல இரு தரப்பினருக்கும் கூச்சல் குழப்பம் வாக்குவாதம் என பரபரப்பு ஏற்பட்டது.

ஒரு வழியாக விருப்பமுள்ளவர்கள் இங்குள்ள பெட்டியில் போடலாம் விருப்பமில்லாதவர்கள் எடுத்து செல்லலாம் என்று அதிகாரிகள் தரப்பில் முடிவெடுத்து அறிவித்தையடுத்து நிலைமை சுமூகமானது. இதே பிரச்சனைக்காக மைலம் பயிற்சி மையத்திலும் கூச்சல் சலசலப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post