Title of the document


முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு வரும் வியாழக்கிழமை (ஏப்ரல் 4) வரை நடைபெறும் என்று மருத்துவக் கல்வி இயக்குநரக தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.
திங்கள்கிழமை (ஏப்ரல் 1) தொடங்கும் கலந்தாய்வில் முதலாவதாக மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. அதைத் தொடர்ந்து தரவரிசைப் பட்டியலின்படி இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்று தேர்வுக் குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள மருத்துவப் பட்டமேற்படிப்புகளான எம்.டி., எம்.எஸ். மற்றும் எம்.டி.எஸ்., (பல் மருத்துவம்) படிப்புகளுக்கு நீட் தேர்வில் தகுதிப் பெற்றவர்கள் இணையதளங்கள் மூலம் விண்ணப்பிக்கும் நடைமுறை கடந்த 11-ஆம் தேதி முதல்  20-ஆம் தேதி  வரை நடைபெற்றது. அதன் மூலம் 11,650 பேர் விண்ணப்பித்திருந்ததாக  மருத்துவக் கல்வி இயக்குநரகம் தெரிவித்தது.
அவை பரிசீலிக்கப்பட்டு,  ஊரகப் பகுதிகளில் சேவையாற்றிய அரசு டாக்டர்களுக்கு மட்டும் நீட் மதிப்பெண்ணுடன் சலுகை மதிப்பெண் வழங்கப்பட்டது. விண்ணப்பங்கள் பரிசீலனைக்குப் பின்னர், சனிக்கிழமை மாலை மருத்துவப் பட்டமேற்படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில் முதல் மூன்று இடங்களை அரசு மருத்துவர்கள் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post