Title of the document

எம்பிபிஎஸ் படிப்பு: 345 இடங்கள் அதிகரிக்க வாய்ப்பு

*நிகழாண்டில் தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது*

*அதன்படி, மதுரை, திருநெல்வேலியில் அமைந்துள்ள மருத்துவக் கல்லூரிகளுக்கு 195 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும் என்றும், புதிதாக அமையவுள்ள கரூர் மருத்துவக் கல்லூரிக்கு 150 இடங்கள் ஒதுக்கப்படும் என்றும் தெரிகிறது*

*இதற்காக மாநில மருத்துவக் கல்வி இயக்குநரகம் இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் ஏற்கெனவே விண்ணப்பித்திருந்ததாகவும், அதற்கான ஆய்வுப் பணிகளை மருத்துவ கவுன்சில் அதிகாரிகள் மேற்கொண்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன*

*தமிழகத்தில் தற்போது 22 அரசு மருத்துவக் கல்லூரிகள் உள்ளன*

*பெருந்துறையில் சாலைப் போக்குவரத்து தொழிலாளர்களின் வாரிசுகளுக்காக செயல்பட்டு வந்த மருத்துவக் கல்லூரியும் நிகழாண்டு முதல் அரசு வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது*

*இதைத் தவிர கரூரில் புதிதாக மருத்துவக் கல்லூரி ஒன்று இந்த ஆண்டு முதல் தொடங்கப்பட உள்ளது*

*இதனால் மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்படும் மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை 24-ஆக உயர்ந்துள்ளது*

*கடந்த ஆண்டு நிலவரப்படி, பெருந்துறை கல்லூரியிலும் சேர்த்து 3,000 எம்.பி.பி.எஸ். இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருந்தன*

*அவற்றில் 15 சதவீதம் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காக வழங்கப்பட்டன. பெருந்துறை கல்லூரியைப் பொருத்தவரை மொத்தம் 100 இடங்கள் அங்கு உள்ளன*

*ஏற்கெனவே அங்கு இருந்த நடைமுறைப்படி, 30 இடங்கள் சாலைப் போக்குவரத்து ஊழியர்களின் வாரிசுகளுக்காகவும், 15 இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டுக்காகவும் அளிக்கப்பட்டது போக மீதமுள்ள 55 இடங்களுக்கு பொது கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது*

*இதனிடையே, நிகழாண்டில் மதுரை மருத்துவக் கல்லூரியில் 95 இடங்களையும், திருநெல்வேலி கல்லூரியில் 100 இடங்களையும் அதிகரிக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்திய மருத்துவக் கவுன்சிலிடம் மருத்துவக் கல்வி இயக்குநரகம் விண்ணப்பித்திருந்தது*

*கரூர் கல்லூரிக்கு 150 இடங்களை அளிக்குமாறு அனுமதி கோரப்பட்டது*

*அதன்பேரில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவக் கல்லூரிகளுக்குச் சென்று ஆய்வு நடத்தியுள்ளனர்*

*விரைவில் இடங்களை அதிகரிப்பதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை இந்திய மருத்துவக் கவுன்சில் அளிக்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் நிகழாண்டில் 345 எம்பிபிஎஸ் இடங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது*

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post