12-வது தேர்ச்சியா? ஏர் இந்தியா நிறுவனத்தில் அசத்தும் வேலை வாய்ப்பு..!

Join Our KalviNews Telegram Group - Click Here
Add This Number In Your Whatsapp Groups - 8608844408

12-வது தேர்ச்சியா? ஏர் இந்தியா நிறுவனத்தில் அசத்தும் வேலை வாய்ப்பு..!

ஏர் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர், கண்ட்ரோலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு பொறியியல் துறை முதல் இளங்கலை பட்டம், 12-வது தேர்ச்சி பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.


நிர்வாகம் : ஏர் இந்தியா பணி மற்றும் காலிப் பணியிட விபரம் பயிற்சிக் கட்டுப்பாட்டு அதிகாரி காலிப் பணியிடங்கள் : 25 ஊதியம் : ரூ.25,000 கல்வித் தகுதி : பொறியியல் துறையில் பி.இ அல்லது பி.டெக் முடித்து பைலட், கேபின் க்ரூவ்-இல் ஓரு ஆண்டு பணி அனுபவம் அல்லது பொறியியல் பாடப்பிரிவில் 3 டிப்ளமோ தேர்ச்சியுடன் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் காலிப் பணியிடங்கள் : 54ஊதியம் : ரூ.21,000 கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் இளங்கலை பட்டம் பெற்று டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டராக 6 மாதம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும் அல்லது 12ம் வகுப்பு தேர்ச்சியுடன் 1 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு : 42 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும். தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர். நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : கட்டுப்பாட்டு அலுவலர் பணியிடத்திற்கு 30.04.2019 டேட்டா என்ட்ரி ஆப்ரேட்டர் பணியிடத்திற்கு 02.05.2019 நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : CMs Department, Air India Limited, GSD Complex, Opps.New ATC Tower Building, Near IGIA Terminal-2, New Delhi - 110 037
விண்ணப்பிக்கும் முறை : www.airindia.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் அசல் மற்றும் சுய சான்றொப்பம் செய்யப்பட்ட நகல் சான்றிதழ்களையும் இணைத்து நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ளவும். இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய www.airindia.in

Post a Comment

0 Comments