Title of the document

TNPSC - குரூப் 1 முதன்மை தேர்வில் தவறான விடைகள்...கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்ததிலும் தவறு : தேர்வர்கள் கவலை


டிஎன்பிஎஸ்சி குரூப் 1 தேர்வுக்கான விடை குறிப்பு வெளியான நிலையில், அவற்றில் 10 வினாக்களுக்கான விடைகள் தவறாக உள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வில் 10 கேள்விகளுக்கு தவறான விடைகள் கொடுக்கப்பட்டதால் தேர்வு எழுதியோர் 15 மதிப்பெண்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கொள்குறி முறையில் கடந்த ஞாயிற்றுகிழமையன்று நடைபெற்ற தேர்வின் போது இத்தகைய குழப்பம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை துணை கண்காணிப்பாளர், துணை ஆட்சியர் உள்ளிட்ட 139 பதவிகளுக்கு இத்தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வுக்கு கடந்த ஜனவரி 3 முதல் 31ம் தேதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து குரூப் 1க்கான முதன்மைத் தேர்வு கடந்த 3ம் தேதி நடந்தது.

பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இந்த முதன்மை தேர்வை எழுதியுள்ளனர். மொத்தம் 200 கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருந்தது. எந்தெந்த கேள்விகளுக்கு என்னென்ன பதில்கள் என்ற பட்டியலை டிஎன்பிஎஸ்இ வெளியிட்டுள்ளது. அதில் தான் 10 கேள்விகளுக்கு தவறான விடைகள் கொடுக்கப்பட்டிருந்தது தெரியவந்துள்ளது. முதல்நிலை தேர்வுக்கான விடைகள் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. tnpsc.gov.in என்ற இணையத்தில் விடைகள் குறிப்பு உள்ளது.

17ம் வினாவில் கொடுக்கப்பட்டுள்ள விடையில், ப்ராஜகட் டைகர் திட்டத்தின் கீழ் இந்தியாவில் மொத்தம் 27 புலிகள் பாதுகாப்பகம் அமைக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. ஆனால், உண்மையில், 50 புலிகள் பாதுகாப்பகம் உள்ளது.வினா எண் 16 ல், சபர்மதி ஆறு மத்தியபிரதேசம், ராஜஸ்தான், குஜராத் மாநிலங்களில் பாய்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால், மத்திய பிரதேசத்தில் சபர்மதி ஆறு பாயவில்லை என்று குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

128ம் கேள்விக்கு கொடுக்கப்பட்ட நான்கு சாய்ஸ்களும் தவறாகும்.வினா எண் 29: சேரன்மகாதேவி குருகுல பயிற்சி மையத்தில் நிகழ்ந்த சிக்கல் காரணமாகத்தான் ஈ.வே. ராமசாமி இந்திய தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறினார். ஆனால், டிஎன்பிஎஸ்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள விடையில், மோ.க காந்தியுடனான முரண்பாடு காரணமாகத்தான் வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கேள்வி எண்: 85 ல் கொடுக்கப்பட்டுள்ள நான்கு வாக்கியத்தில் இந்தியாவின் மேற்கு இமய மலைப்பகுதிகளில் சிவப்பு பாண்டா காணப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. ஆனால், இது தவறு என பயிற்சியாளர்கள் ஆதாரத்துடன் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர். தவறான விடைகளால் தேர்வு எழுதிய மாணவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதனால் அவர்கள் 15 மதிப்பெண்களை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆங்கில கேள்விகளை தமிழில் மொழி பெயர்த்ததிலும் தவறு உள்ளதை போட்டி தேர்வு பயிற்சியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப் 2 தேர்விலும் இதே போல தவறான விடைகள் இடம்பெற்றன. இது குறித்து டிஎன்பிஎஸ்சி கவனத்திற்கு கொண்டு சென்றும் தற்போது மறுமுறையும் அதே போல தவறு நிகழந்துள்ளது தேர்வர்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post