பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:
திருக்குறள் : 144
எனைத்துணையர் ஆயினும் என்னாம் தினைத்துணையும்
தேரான் பிறனில் புகல்.
உரை:
தினையளவும் ஆராய்ந்து பார்க்காமல் பிறனுடைய மனைவியிடம் செல்லுதல், எவ்வளவு பெருமையை உடையவராயினும் என்னவாக முடியும்?.
பழமொழி:
Little drops of water make the mighty ocean
சிறு துளி பெரு வெள்ளம்
பொன்மொழி:
நம் காலுக்கடியிலேயே நாம் தேடும் சந்தோசம், அமைதி இருக்கிறது. ஆனால் அஞ்ஞானம் என்னும் இருட்டில் இருக்கும் நமக்கு அது தெரிவதில்லை.
-சுவாமி மித்ரானந்தா
இரண்டொழுக்க பண்பாடு :
1) என் உடன் பயிலும் மாணவ,மாணவிகளுடன் எந்த வேறுபாடும் இன்றி அன்போடு பழகுவேன்.
2) பிற மாணவர்கள் வைத்து இருக்கும் பொருள்கள் மீது ஆசை படவோ அவற்றை எடுத்துக்கொள்ளவோ மாட்டேன்.
பொது அறிவு :
1) ஒரு தேனீயால் எத்தனை முறை கொட்ட முடியும் ?
ஒரே ஒரு முறை
2. மின்தடையை கண்டுபிடித்தவர் யார் ?
ஓம்
நீதிக்கதை :
ஒரு காட்டில் ஒரு நாள் அடை மழை பெய்துக் கொண்டிருந்தது. அப்போது அந்தக் காட்டில் இருந்த ஒரு குரங்கு மழையில் நனைந்து நடுங்கியவாறு ஒரு மரத்தடியில் ஒதுங்கி நின்றது.
அந்த மரத்தில் இருந்த பறவை ஒன்று கூடு கட்டி தன் குஞ்சுகளுடன் மழைக்கு நனையாது பாதுகாப்பாக உட்கார்ந்து கொண்டிருந்தது.
மரத்தடியில் குரங்கு நனைந்து நடுங்குவதைப் பார்த்ததும் பறவைக்கு குரங்கு மீது இரக்கம் வந்தது. மனம் பொறுக்காமல் ‘ குரங்காரே..என்னைப்பாரும்…வெய்யில் மழையிலிருந்து என்னையும் என் குஞ்சுகளையும் காப்பாற்றிக்கொள்ள கூடு கட்டியிருக்கிறேன். அதனால் தான் இந்த மழையிலும் நாங்கள் சந்தோஷமாக இருக்கிறறோம். நீரும் அப்படி ஒரு பாதுகாப்பான கூடு செய்திருக்கலாமே. கூடு இருந்தால் நீர் இப்படி நனைய மாட்டீர் அல்லவா? என்று புத்தி சொன்னது. இதனைக் கேட்ட குரங்காருக்கு கோபம் சீறிக் கொண்டு வந்தது. உனைவிட நான் எவ்வளவு வலுவானவன். எனக்கு நீ புத்தி சொல்கிறாயா?….
இப்போ உன்னையும் உன் குஞ்சுகளையும் என்ன செய்கிறேன் பார்’ என மரத்தில் விடுவிடு என ஏறி பறவையின் கூட்டை பிய்த்து எறிந்தது.
பறவைக்கு அப்போதுதான் புரிந்தது’ அறிவுரைகளைக்கூட…..அதைக்கேட்டு நடப்பவர்களுக்குத்தான் சொல்லவேண்டும் என்று.
துஷ்டனுக்கு நல்லது சொல்லப் போய் தனக்கும் தன் குஞ்சுகளுக்கும் பாதுகாப்பாக இருந்த கூட்டை இழந்து நனைகின்றோமே என மனம் வருந்தியது.
நாமும்…ஒருவருக்கு அறிவுரை வழங்குமுன் அவர் அதனை ஏற்று நடப்பாரா என்று புரிந்துகொண்ட பின்னரே அறிவுரை வழங்கவேண்டும்.
இன்றைய செய்தி துளிகள் :
1) அரசு பணியில் விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீடு அமல்
2) அரசு மேல்நிலை பள்ளிகளில், அடுத்த கல்வி ஆண்டு முதல், பிளஸ் 1, பிளஸ் 2வுக்கு, 'ஸ்மார்ட்' வகுப்புகள் நடத்த உத்தரவு
3) பிளஸ் 1 பொதுத்தேர்வு இன்று தொடக்கம்: 8.21 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்
4) வரும் ஜூலை 7-ம் தேதி ஆசிரியர்களுக்கான மத்திய டெட் தேர்வு: சிபிஎஸ்சி அறிவிப்பு
5) மகளிர் கிரிக்கெட்: முதல் டி20 போட்டி: 41 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்து அபார வெற்றி
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்குà®®் பகிà®°ுà®™்கள் - யாà®°ேனுà®®் à®’à®°ுவருக்காவது பயன்படுà®®்...
Post a Comment