Title of the document

கூகுள் நிறுவனம் தனது ஜிபோர்டு செயலியில் புதிய அப்டேட் வழங்கியிருக்கிறது. ஐ.ஓ.எஸ். இயங்குதளத்தில் வழங்கப்பட்டிருக்கும் புதிய அப்டேட் உடனடியாக மொழிமாற்றம் செய்யும் வசதியை கீபோர்டு செயலியில் வழங்குகிறது.

கடந்த இரண்டு ஆண்டுகளாக இதே அம்சம் ஜிபோர்டின் ஆண்ட்ராய்டு செயலியில் வழங்கப்பட்டிருக்கிறது. புதிய அப்டேட் மூலம் ஐபோன் மற்றும் ஐபேட் பயன்படுத்துவோர் கிட்டத்தட்ட 100 மொழிகளில் உடனடியாக மொழிமாற்றம் செய்து கொள்ளலாம். மேம்படுத்தப்பட்ட ஜிபோர்டு செயலி ஆப்பிள் ஆப் ஸ்டோரில் கிடைக்கிறது.
103 மொழிகள் மொழியாக்கம்:
புதிய அப்டேட் மூலம் கூகுள் டிரான்ஸ்லேட் சேவையில் கிடைக்கும் அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்து கொள்ளலாம்.

கூகுள் டிரான்ஸ்லேட் வலைதளத்தின் படி டிரான்ஸ்லேட் சேவை 103 மொழிகளை சப்போர்ட் செய்யும். உடனடி மொழிமாற்றம் தவிர, ஜிபோர்டு ஐ.ஓ.எஸ். செயலியில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ளப்படவில்லை.


 ஜிபோர்டு பயன்படுத்துவது எப்படி?
செயலியை திறந்து மொழிமாற்றம் செய்ய வேண்டிய ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். இனி, ஜி ஐகானை க்ளிக் செய்து டிரான்ஸ்லேட் ஐகானை தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் மொழிமாற்றம் செய்ய வேண்டிய மொழிகளை தேர்வு செய்ய வேண்டும்.

 செலக்ட் ஐகானை க்ளிக் செய்யவும்:
இனி நீங்கள் மொழிமாற்றம் செய்யவேண்டிய வார்த்தைகளை பதிவிட்டால், அதற்கான பிரீவியூ தெரியும். இனி நீங்கள் மொழிமாற்றத்தை பயன்படுத்திக் கொள்ள செலக்ட் ஐகானை க்ளிக் செய்ய வேண்டும்.

 புதிய மொழிமாற்ற வசதி
புதிய மொழிமாற்ற வசதியுடன் ஜிஃப், எமோஜி சர்ச், ஸ்டிக்கர்கள், கிளைட் டைப்பிங், சர்ச் மற்றும் பல்வேறு அம்சங்கள் வழங்கப்படுகிறது. சமீபத்தில் ஜிபோர்டு செயலியில் தாய், மெர், லௌ மற்றும் மங்கோலிய மொழிகளுக்கான மொழிமாற்ற வசதியும் சேர்க்கப்பட்டது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post