எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு

Join Our KalviNews Telegram Group - Click Here
9092837307 - Add This Number In Your Whatsapp Groups - 9092837307

எட்டாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதிய தனித் தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை வெளியிடப்படவுள்ளது.
தமிழகத்தில் கடந்த ஜன.21-ஆம் தேதி முதல் ஜன.25-ஆம் தேதி வரை தனித் தேர்வர்களுக்கு எட்டாம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது.  இதற்கான தேர்வு முடிவுகள் செவ்வாய்க்கிழமை (மார்ச் 19) மாலை 5 மணிக்கு வெளியிடப்படவுள்ளன www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரியில் தங்களது பதிவெண்,  பிறந்த தேதி ஆகியவற்றைப் பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்து கொள்ளலாம்.

மேலும் தேர்வர்கள் ஆன்-லைனில் விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்லிடப்பேசி எண்ணுக்கு குறுஞ்செய்தியாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments