ஆதரவற்ற மாணவர்களுக்கு இலவச கல்வி: ராமகிருஷ்ணா மிஷன் அறிவிப்பு

Join Our KalviNews Telegram Group - Click Here

பெற்றோர் இல்லாத ஏழை மாணவர்கள் இலவசமாக கல்வி கற்பதற்கு வாய்ப்பு வழங்கவுள்ளதாக ராமகிருஷ்ணா மிஷன் அறிவித்துள்ளது.


இது தொடர்பாக ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்ல செயலாளர் சுவாமி சத்யஞானந்தர் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
ராமகிருஷ்ணா மிஷன் மாணவர் இல்லத்தில் ஆண்டுதோறும் ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் ஆறாம் வகுப்பிலும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பாலிடெக்னிக் (மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், கம்ப்யூட்டர்) முதலாமாண்டிலும், பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டாம் ஆண்டிலும் சேர்ந்து படிப்பதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக வரும் கல்வியாண்டிலும் ஆதரவற்ற அல்லது தாய் அல்லது தந்தையை இழந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நல்ல மதிப்பெண் பெற்ற தகுதியுடைய மாணவர்களுக்கு கல்வி, உணவு, தங்குமிடம் ஆகியவற்றுக்கான கட்டணம் செலுத்துவதில் இருந்து முழு விலக்களிக்கப்படும். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு 044-24990264, 044-42107550 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிட்டுள்ளார்.
============================================================================================ 👉👉👉 கீழே உள்ள WhatsApp Button ஐ கிளிக் செய்து Atleast ஒருவருக்காவது Share பண்ணுங்க, இந்த செய்தி யாரேனும் ஒருவருக்காவது பயன்படும் !! ============================================================================================

கருத்துரையிடுக

0 கருத்துகள்