பிற மொழித் தேர்வர்களை விருப்ப மொழி தேர்வு எழுத அனுமதிக்க கூடாது: தமிழகதேர்வுத்துறை உத்தரவுதமிழ் தவிர்த்து பிற மொழிப் பாடங்களில் தேர்வு எழுதியவர்களை விருப்ப மொழிப்பாடத் தேர்வு எழுத அனுமதிக்கக்கூடாது என்று தேர்வுத் துறை உத்தரவிட்டு உள்ளது.

இதுகுறித்து அரசு தேர்வுத்துறை சார்பில் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழிப்பாடம் தவிர்த்து பிற மொழிப் பாடங்களில் தேர்வு எழுதியவர்கள் இன்று (மார்ச் 23) நடைபெற உள்ள விருப்ப மொழிப் பாடத் தேர்வை எழுத கண்டிப்பாக அனுமதிக்கக் கூடாது. இந்த விவரத்தை தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து தேர்வு மையமுதன்மை கண்காணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்த வேண்டும்.அதற்கு மாறாக பிற மொழிப் பாடங்களில் தேர்வுஎழுதிய மாணவர்களை விருப்ப மொழித் தேர்வு எழுத அனுமதிக்கும் மைய கண்காணிப்பாளர்கள் மீதுதக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இன்று மாலைக்குள்..

இதுதவிர இன்று நடைபெறும் விருப்ப மொழிப் பாடத் தேர்வுஎழுதும் தேர்வர்களின் எண்ணிக்கையை பாடவாரியாகவும், மாவட்ட வாரியாகவும் பட்டியலிட்டு மாலைக்குள் directordge.tn@nic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.