Title of the document


தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் சார்பில் பத்து அறிவியல் ஆசிரியர்களுக்கு ரூ.25 ஆயிரம் பரிசுத் தொகையுடன் அளிக்கப்படும் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு  ஏப்.5-ஆம் தேதி வரை ஆசிரியர்கள் விண்ணப்பிக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
 கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், இயற்கை அறிவியல் போன்ற துறைகளில்  சிறந்த பத்து ஆசிரியர்களுக்கு, சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதும் ரூ. 25 ஆயிரம்  பரிசும் வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே  அறிவித்திருந்தது.  இதில், பரிசுத் தொகைக்காக ரூ. 2.50 லட்சமும், இதர செலவினங்களுக்கு ரூ.1.30 லட்சமும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதன்படி, அரசுப் பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை பணியாற்றும் ஆசிரியர்கள் இந்த விருதுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த விருதுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்து, பட்டியலை  அனுப்பும்படி, தமிழ்நாடு அறிவியல் நகரத்தின் துணைத் தலைவர் சகாயம், பள்ளிக் கல்வித் துறைக்கு ஏற்கெனவே  கடிதம் அனுப்பியிருந்தார்.  இதைத் தொடர்ந்து, ஆசிரியர்களிடமிருந்து எதிர்பார்த்த அளவுக்கு விண்ணப்பங்கள் வரவில்லை எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில்,   சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கு ஏப்ரல் 5-ஆம் தேதி வரை  விண்ணப்பிக்கலாம் எனவும்,  தகுதியுள்ள ஆசிரியர்கள், துணைத் தலைவர்,  அறிவியல் நகரம்,  பிர்லா கோளரங்க வளாகம்,  காந்தி மண்டபம் சாலை,  சென்னை- 25, என்ற முகவரிக்கு அனுப்பிவைக்கலாம் என பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post