திருக்குறள்
அதிகாரம்:பயனில சொல்லாமை
திருக்குறள்:197
நயனில சொல்லினுஞ் சொல்லுக சான்றோர்
பயனில சொல்லாமை நன்று.
விளக்கம்:
பண்பாளர்கள், இனிமையல்லாத சொற்களைக்கூடச் சொல்லி விடலாம்; ஆனால் பயனில்லாத சொற்களைச் சொல்லாமல் இருப்பதே நல்லது.
பழமொழி
Good wine needs no bush
பூக்கடைக்கு விளம்பரம் தேவையில்லை
இரண்டொழுக்க பண்புகள்
1. இயற்கை வளங்களை அனைத்தும் கடவுளால் எனக்கு அளிக்கப்பட்ட கொடை.
2. அவற்றை அழிப்பது கடவுளை அவமதிப்பதற்கு சமம். எனவே இயற்கை வளங்களை பேணிப் பாதுகாப்பேன்.
பொன்மொழி
மாறுதல்கள் நிச்சயம் தவிர்க்க முடியாதவை. மாற்றங்களை எதிர்கொள்ள மன உறுதி வேண்டும். மாற்றம் என்பதைத் தவிர மாறாதது உலகில் இல்லை.
- கார்ல் மார்க்ஸ்
பொது அறிவு
1.மக்களவைத் தலைவராக நீண்ட காலம் பதவி வகித்தவர் யார்?
பல்ராம் ஜாக்கர்
2. இந்தியாவில் அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம் யாரால் வழங்கப்படுகிறது?
இந்திய தேர்தல் ஆணையம்
எச்சரிக்கை நீங்கள் ஐஸ்க்ரீம் பிரியர்களா?
எந்த Brand-ன்னு பார்த்து வாங்கி சாப்பிடுங்க!! இல்லேன்னா சொந்தக் காசுல சூனியம் வச்சுக்கிற கதைதான்!!
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஐஸ்க்ரீமை விரும்பி சுவைக்காதவர்கள் இருக்க முடியாது. ஐஸ்க்ரீம்களில் ஏராளமான வகைள் உண்டு. கப் ஐஸ், கோன் ஐஸ், குல்ஃபி ஐஸ், பார் ஐஸ் இப்படி வகை வகையாக பல வடிவங்களில் பல சுவைகளில் கிடைக்கின்றன.
1. ஒரு சில நிறுவனங்கள் இதற்கு மாற்றாக தாவர எண்ணைய், பாமாயில், க்ளுக்கோஸ் மற்றும் இதர வாசனை திரவியங்களை கொண்டு ஐஸ்க்ரீம்கள் தயரிக்கின்றனர். இந்த ஐஸ்க்ரீம்கள் frozen desert என்று சொல்லப்படுகின்றது. இவைகள் ஐஸ்க்ரீம்கள் இல்லை என்றாலும் இதைத் தயாரிக்கும் நிறுவனங்கள் 'ஐஸ்க்ரீம்' என்றே விளம்பரப்படுத்தி வந்தன. இந்த வகையான ஐஸ்க்ரீம்களை தயாரிக்க குறைந்த செலவே ஆகின்றது. ஆனால் விற்பனை செய்யப்படும் போது பாலில் தயாரிக்கும் நிறுவனங்களின் விலையிலே இந்த தயாரிப்பு களும் விற்கப்படுகின்றன.
2. ஏன் frozen desert தயாரிப்பினை அதிகம் உண்ணக் கூடாது என்று ஆராய்ந்தால் frozen desert என்று சொல்லக் கூடிய அந்த வகையான ஐஸ்க்ரீம்களில் கெட்ட கொழுப்பு சத்தானது அதிகமாக உள்ளது. கால்சியம் இந்த frozen desert ஐஸ்க்ரீம் வகைகளில் ஒரு சதவீதம் கூட இல்லை.
3. இந்த Frozen Dessert கூறப்பட்டுள்ள ஐஸ்க்ரீம் வகைகளில் saturated
fat மற்றும் trans fat ஆகிய இரண்டும் உடல் நலத்திற்கு தீமை விளை விக்கக் கூடியவை. தொடர்ந்தாற் போல் இந்த வகையான Frozen Dessert ஐஸ்க்ரீம்களை குழந்தைகள் முதல் பெரியவர் வரை வாங்கி உண்பதால் அதிக கொழுப்புசத்து காரணமாக உடல் எடை அதிகரித்தல் கொலஸ்ட்ரால் கூடுதல் இதன் காரணமாக இரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்மந்தமான நோய்கள் நிச்சயமாக ஏற்படும் என்று மருத்துவர்களால் சொல்லப்படுகின்றது.
எனவே ஐஸ்க்ரீம் வாங்கி உண்ணும் போது அது பாலில் தயாரிக்கப் பட்டதா அல்லது frozen desert ஆ என்பதை பார்த்து வாங்கி பயன் படுத்தவும்.
English words and Meaning
Empower. அதிகாரம்,
ஆட்சி
Serious முக்கியமான, ஆபத்தான
Javelin. எறி ஈட்டி
Mile stone. மைல்கல்,
முக்கிய சம்பவம்
Formal. இயல்பான, முறையான
அறிவியல் விந்தைகள்
* சராசரியாக ஒரு மனிதனின் இரத்த நாளங்கள் நீளம் 60,000 மைல் ஆகும்.
*தேள் உணவின்றி ஒரு வருடம் வரை உயிரோடு இருக்கும்.
*ஆப்பிள் 25%காற்றால் ஆனது எனவே அவை நீரில் மிதக்கின்றன
* ஸ்ட்ராபெர்ரி பழத்தின் விதைகள் அவற்றின் தோலில் காணப்படும்.
*மனித உடலின் வலிமையான தசை நாக்கு.
Some important abbreviations for students
* MA - Master of Arts
* MBA - Master of Business Administration
நீதிக்கதை
நகரில் கப்பி ரோடு ஒன்று இருந்தது. அதன் மேல் வேகமாகப் போன வண்டியின் சக்கரம் ஒன்று ஒரு கப்பிக் கல்லை பெயர்த்து உருட்டி விட்டுப் போய் விட்டது. அந்தக் கப்பிக் கல் தனக்குள் சொல்லிக் கொண்டது. “என்னைப் போன்ற மற்றவர்களுடன் பிணைக்கப் பட்டு நான் இப்படி ஒரே இடத்தில் கிடப்பானேன்? நான் தனியாகவே வாழ்ந்து பார்க்கிறேன்!”
தெருவோடு போன ஒரு பையன் அந்தக் கல்லைத் தன் கையில் எடுத்துக் கொண்டான். கல் தனக்குள் எண்ணிக் கொண்டது. “நான் பிரயாணம் செய்ய விரும்பினேன். பிரயாணம் செய்கிறேன். தீவிரமாக எதையும் விரும்பினாலே போதும். விரும்பிய படி நடக்கும்!”
கல்லை ஒரு வீட்டை நோக்கி எறிந்தான் பையன். “ஹா! நான் பறக்க விரும்பினேன்; பறக்கிறேன். என் விருப்பம் போலத்தான் நடக்கிறது எல்லாம்”
ஒரு ஜன்னல் கண்ணாடியில் ‘டண்’ என்று கல் மோதி உடைத்துக் கொண்டு உள்ளே போனது, கண்ணாடி உடையும் போது அது சொல்லியது “போக்கிரி, நான் போகும் வழியில் விலகிக் கொள்ளாமல் நிற்கிறாயே?! என்னை மறிப்பவர்களை எனக்குப் பிடிக்கவே பிடிக்காது. என் சௌகரியத்திற்காகத்தான் எல்லாம் இருக்கிறது. ஆகவே இனிமேல் கவனமாக இரு!”
வீட்டின் அறைக்குள் இருந்த ஒரு மெத்தையின் மேல் விழுந்தது கல். “இவ்வளவு நேரம் பிரயாணம் செய்ததில் அலுப்பாகி விட்டது. சற்று ஓய்வு தேவை என்று நினைத்த பட்சத்திலேயே படுக்கை கிடைத்து விட்டதே. ஆஹா!” என்று நினைத்துக் கொண்டது.
ஒரு வேலைக்க்காரன் அங்கே வந்தான். படுக்கையில் இருந்த கல்லைத் தூக்கி ஜன்னல் வழியே திரும்பவும் தெருவில் எறிந்து விட்டான்.
அப்போது கப்பிக் கல் தன்னுடன் பதிந்திருந்த ஏனைய கப்பிக் கற்களிடம் “சகோதரர்களே! சௌக்கியமா? நான் இப்போது பெரிய மனிதர்களைப் பார்க்க அவர் மாளிகைக்குப் போய் விட்டுத் திரும்புகிறேன். பெரிய மனிதர்களையும் பணக் காரர்களையும் எனக்குப் பிடிப்பதில்லை. என்னைப் போன்ற சாதாரண மக்களிடம்தான் எனக்கு உண்மையில் ரொம்பப் பிரியமும் மரியாதையும் இருக்கிறது. அதனால்தான் திரும்பி விட்டேன்” என்றது.
சொல்லிக் கொண்டிருக்கும் போதே சரக்கு ஏற்றி வந்த ஒரு வண்டியின் சக்கரம் தனியாகக் கிடந்த கல்லின் மேல் ஏறியது. “அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா!” என்று சொல்லிக் கொண்டே துண்டு துண்டாகச் சிதறிப் போனது அந்தப் பச்சோந்தி கப்பிக் கல்.
இன்றைய செய்திகள்
30.03.2019
* 2018 ஆம் ஆண்டு மட்டும் இந்தியா சுமார் 2,299 மில்லியன் டன்ஸ் அளவு கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியிட்டுள்ளது என்று சர்வதேச ஆற்றல் அமைப்பு தெரிவித்துள்ளது.
* 10-ம் வகுப்பு பொது தேர்வு நேற்றுடன் முடிந்தது- விடைத்தாள் திருத்தும் பணி இன்று முதல் தொடக்கம்.
*தலைமன்னார்-தனுஷ்கோடி இடையே கடலில் 28 கிலோ மீட்டர் தூரத்தை 10½ மணி நேரத்தில் நீந்தி கடந்து தேனி சிறுவன் ஜெய் புதிய சாதனை படைத்தான்.
* இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பி.வி.சிந்துவும், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் சாய் பிரனீத்தும் காலிறுதிக்கு முன்னேறினர்.
* அஸ்லான் ஷா ஹாக்கி தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் போலந்தை 10 - 0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது இந்தியா.
Today's Headlines
* The International Energy Agency said India had released 2,299 million tonnes of carbon dioxide gas in 2018 alone.
* The 10th class general examination ended yesterday - the workshop editing work is starting today.
* Theni boy-Dhanushkodi walked in the sea at a stretch of 28 miles and touched 10½ hours.
In the women's singles competition, PV Sindhu and India's Sai Praneet in the men's singles event advanced to the quarterfinals of the Indian Open badminton tournament.
* In the league match of the Ashlan Shah Hockey tournament, Poland defeated Poland 10-0.
Prepared by
Covai women ICT_போதிமரம்

Post a Comment