Title of the document


 பிளஸ் 1 மற்றும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுகள் நேற்று நடந்தன. தனித்தேர்வர்கள் உட்பட, 1676 பேர் பங்கேற்கவில்லை.திருப்பூர் மாவட்டத்தில், பிளஸ்1 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம், ஆடை தொழில்நுட்பம் மற்றும் அலுவலக மேலாண்மை தேர்வுகள் முறையே, 10 ஆயிரத்து 256 மாணவர்களுக்கு, நேற்று தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது.இதில், உயிரியல் - 5478; தாவரவியல் - 315; வரலாறு - 2419; வணிக கணிதம் - 1522; ஆடை தொழில்நுட்பம் - 31; அலுவலக மேலாண்மை - 109 பேர் மட்டுமே தேர்வெழுதினர்;
தனித்தேர்வர்களில், 303 பேர் பங்கேற்கவில்லை.வினாத்தாள் குறித்து மாணவர்கள் கூறியதாவது:விக்ரம், கே.எஸ்.சி., பள்ளி: உயிரியல் தேர்வை பொருத்தவரை, ஒன்று மற்றும் 5 மதிப்பெண் கேள்விகள் கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. மற்ற கேள்விகள் ஈஸியாக இருந்ததால் சமாளித்துவிட்டேன். இல்லையேல் திணறியிருப் பேன்.எம்.அகபு, கே.எஸ்.சி., பள்ளி: தாவரவியல் தேர்வில் நம்பிக்கையாக வரும் என்று நினை த்து படித்த எந்த கேள்வியும் வரவில்லை. மொத்தத்தில் பாஸ் ஆகி விடலாம் என்ற அளவிற்கே இருந்தது.எப்.கிறிஸ்டினா ஜெனிபர், ராமகிருஷ்ணா பள்ளி: உயிரியல் தேர்வில், 2 மதிப்பெண் கேள்விகள் கஷ்டமாக இருந்தது. பலமுறை படித்த பிறகே கேள்விகளை புரிந்துகொள்ள முடிந்தது.'டிவி ஸ்ட்' முறையில் கேட்கப்பட்டிருந்தன.எஸ்.பிரியதர்ஷினி, ராமகிருஷ்ணா பள்ளி: உயிரியல் தேர்வு எதிர்பார்த்தபடி கேள்விகள் வரவில்லை.


ஓரளவுக்கு ஈஸிதான். இருந்தாலும், 5 மதிப்பெண், 3 மதிப்பெண் கேள்விகள் ஆழமாக கேட்கப்பட்டிருந்ததால் சிரமமாக இருந்தது.10ம் வகுப்புதமிழ் 2ம் தாள்!இதைத்தொடர்ந்து மதியம் 2:15 மணிக்கு பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான தமிழ் இரண்டாம் தாள் தேர்வு நடந்தது.இதில், 29 ஆயிரத்து, 322 பேர் தேர்வெழுதினர்; 1037 பேர் ஆப்சென்ட். மேலும், அனுமதிக்கப்பட்ட தனித்தேர்வர்களில், 498 பேர் பங்கேற்றனர்; 46 பேர் தேர்வெழுத வரவில்லை.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post