கோடை விடுமுறை முடிந்து தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் வருகிற ஜுன் மாதம் 10-ம் தேதி திறக்கப்படும் !!

தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் வருகிற ஜுன் மாதம் 10-ம் தேதி திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வெயில் வாட்ட துவங்கிவிட்டது. இதனால் பொதுமக்கள் உள்ளிட்ட மாணவர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பகல் நேரங்களில் வெளியில் தலைகாட்ட முடியாத கொடுமை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான நகரங்களில் 108 டிகிரி ஃபாரன்ஹீட்டுக்கு மேல் வெப்பம் தாண்டியுள்ளது. பகல் நேரங்களில் வெப்பமும், இரவு நேரங்களில் அனல் காற்றும் வீசி வருகிறது. இதனால் சிறுபிள்ளைகள் அதிக அளவில் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள்.

இதனிடையே, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் ஜூன் மாதம் 3 ஆம் தேதி திறக்கப்படும் என்று ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்தது.

ஆனால் வெயிலின் கொடுமை காரணமாக இது தள்ளி போடப்பட்டுள்ளது.

ஜுன் 3ஆம் தேதிக்கு பதிலாக ஜுன் 10 ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று புதிதாக உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் உடல் நிலையை கருத்தில் கொண்டும் விடுமுறையை தமிழக அரசு நீட்டித்துள்ளதால் பெற்றோர்கள் நிம்மதியும், மாணவர்கள் குஷியும் அடைந்துள்ளனர்