Title of the document

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிப் பொதுத் தேர்வுகளை முன்கூட்டியே முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடப்பதால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி பொதுத்தேர்வுகளை ஏப்ரல் 10ம் தேதிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இது குறித்த சுற்றறிக்கை, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே, 10,11 மற்றும் 12 ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை நடத்துவதிலோ, முடிவுகள் வெளியிடுவதிலோ எந்த வித பிரச்னையும் இல்லை என தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வாக்குப்பதிவிற்கு அடுத்த நாளான ஏப்ரல் 19ம் தேதி, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள், வெளியாகிறது. இதில் எந்த சிக்கலும் எழாது என்றும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் 10, 11, 12ம் வகுப்பு தேர்வுகளை நடத்துவதிலோ, தேர்வு முடிவுகளை வெளியிடுவதிலோ எந்த பிரச்சனையும் இல்லை - தேர்வுத்துறை அதிகாரிகள் தகவல்

* வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு மறுநாள் ஏப்.19ம் தேதி தான் 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாவதால் எந்த சிக்கலும் இல்லை - தேர்வுத்துறை அதிகாரிகள்

* 1 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப். 10ம் தேதிக்குள் தேர்வுகளை முடிக்கவும் தேர்வுத்துறை திட்டம்.வழக்கம் போல் தேர்தல் அன்று பொது விடுமுறை விடப்படுகிறது. தேர்தலுக்கு முந்தைய நாள் 17-ம் தேதி மகாவீர் ஜெயந்தியும், தேர்தலுக்கு அடுத்த நாள் 19-ம் தேதி புனித வெள்ளியும் அரசு விடுமுறை நாளாகும். இதனை தொடர்ந்து சனி மற்றும்ஞாயிற்றுக்கிழமை வருவதால் மொத்தம் 5 நாட்கள் தொடர் விடுமுறை கிடைக்கிறது.

இந்த விடுமுறை வாக்கு சதவீதத்தை பாதிக்கும் என்று, அரசியல் கட்சியினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post